அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டாலும் போர்க்குற்ற அறிக்கை சமர்ப்பிக்கப்படும்! ஐ.நா ஆணையாளர்
சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நாவின் விசாரணை அறிக்கை செப்டெம்பர் மாதம் வெளியிடப்படும். குறித்த அறிக்கை...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_474.html
சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நாவின் விசாரணை அறிக்கை செப்டெம்பர் மாதம் வெளியிடப்படும்.
குறித்த அறிக்கைக்கு மீண்டும் புதிய அழுத்தங்கள் கொடுக்கப்பட்டாலும் விசாரணை அறிக்கையை வரும் செப்டெம்பர் மாதம், தான் வெளியிடுவேன் என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் தெரிவித்துள்ளார்.
ஜெனிவாவில், அரசசார்பற்ற நிறுவனங்களுடன் நடத்தப்பட்ட மூடிய அறை கலந்துரையாடலில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு ஆணையாளர் பதிலளித்து பேசினார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் செப்டெம்பர் அமர்வு ஆரம்பமாவதற்கு இரண்டு வாரங்கள் முன்னதாக, இந்த அறிக்கை வெளியிட வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கையை தன்னால் இப்போதும் கூட வெளியிட முடியும் என்றும், ஆனாலும் செப்டெம்பர் வரை பிற்போட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30வது அமர்வு, வரும் செப்டெம்பர் 14ம் திகதி தொடக்கம், ஒக்ரோபர் 02 ம் திகதி வரை நடைபெறவுள்ளது.
ஏற்கனவே மார்ச் மாதம் வெளியிட தயாராக இருந்த அறிக்கை, சிறிலங்கா அரசாங்கம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக பிற்போடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



Sri Lanka Rupee Exchange Rate