ஏப்ரல் 23 ஆம் திகதி நாடாளுமன்றம் கட்டாயம் கலைக்கப்பட வேண்டும்: ஜே.வி.பி
அமைச்சர் பதவிகளை வழங்க காட்டிய அக்கறை 19வது திருத்தச் சட்டத்தின் மீதும் இருந்திருந்தால், அந்த திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டு முடிக்கப்...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_697.html

அமைச்சர் பதவிகளை வழங்க காட்டிய அக்கறை 19வது திருத்தச் சட்டத்தின் மீதும் இருந்திருந்தால், அந்த திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டு முடிக்கப்பட்டிருக்கும் என ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
ஏப்ரல் 23 ஆம் திகதி நாடாளுமன்றம் கட்டாயம் கலைக்கப்பட வேண்டும் எனவும் இவ்வாறான விகடத்தனமான நாடாளுமன்ற ஆட்சி நாட்டுக்கு தேவையில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
பெலவத்தையில் உள்ள ஜே.வி.பியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நேற்று அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர் பழைய முறைக்கு அமைய சிறப்புரிமைகளுக்காக மீண்டும் இந்த பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இது மக்கள் வழங்கிய ஆணைக்கு முரணானது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் உடனடியாக மக்களுக்கு இதனை தெளிவுப்படுத்த வேண்டும் எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate