பேரியல் அஷ்ரப்பின் மனு தொடர்பில் பதிலளிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் பிரதிவாதிகளுக்கு உத்தரவு
ஓய்வூதியத்தை வழங்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப் தாக்கல் செய்த மனு சம்பந்தமாக நீதிமன்றத்தில் பதிலளிக்குமாறு மேன்...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_116.html
ஓய்வூதியத்தை வழங்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப் தாக்கல் செய்த மனு சம்பந்தமாக நீதிமன்றத்தில் பதிலளிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் நாடாளுமன்ற செயலாளர், பிரதி செயலாளர் மற்றும் சட்டமா அதிபருக்கு இன்று உத்தரவிட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் எதிர்வரும் மே மாதம் 14 ஆம் திகதி நீதிமன்றத்தில் பதிலளிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் பிரதிவாதிகளாக இவர்களுக்கு அறிவிப்பாணை அனுப்பவும் உத்தரவிட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் விஜித் மலல்கொட மற்றும் எச்.சீ.ஜே. மடவல ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
தனது கணவரான ஏ.எச்.எம்.அஷ்ரப் உயிரிழந்த பின்னர், தனக்கு விதவைக்கான ஓய்வூதியம் வழங்கப்படுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினராக இரண்டு முறை பதவி வகித்த தனக்கு கிடைக்க வேண்டிய ஓய்வதியத்தை கொடுக்காமல் இருப்பது அநீதியானது எனவும் பேரியல் அஷ்ரப் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate