வெளிநாடுகளிலிருந்து சிறிலங்காவுக்கு அனுப்பி வைக்கப்படும் பணம் தொடர்பில் கண்காணிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. சிறிலங்காவுக்கு வங்கிகளின் ...

வெளிநாடுகளிலிருந்து சிறிலங்காவுக்கு அனுப்பி வைக்கப்படும் பணம் தொடர்பில் கண்காணிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறிலங்காவுக்கு வங்கிகளின் ஊடாக அனுப்பி வைக்கப்படும் பணம், வங்கியின் நேரடி ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதாக, சிறிலங்காவின் மத்திய வங்கித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த அரசாங்கத்தின் போதும் இதே நிலைமை மேற்கொள்ளப்பட்டு வந்தது. எனினும் புதிய அரசாங்கத்தின் கீழ் இந்த முறைமை விலக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் புதிய அரசாங்கம் இந்த நடைமுறையை தொடர்வதாக தெரிவிக்கப்படுகிறது.
வெளிநாட்டவர்களால் சிறிலங்காவில் உள்ளவர்களின் வங்கி கணக்குகளுக்கு வைப்பு செய்யப்படும் பணம் இரண்டு நாட்கள் வரையில் மத்திய வங்கியினால் தேக்கி வைக்கப்படுகிறது.
அது தொடர்பான முழுமையான ஆய்வின் பின்னரே இந்த பணத்தை உரிய தரப்பினருக்கு வழங்க அனுமதிக்கப்படுவதாக மத்திய வங்கி தகவல்கள் தெரிவிக்கின்றன.