அமெரிக்காவின் மத்திய மேற்கு மாகாணங்களில் கடுமையான பனிப்புயல்: - இயல்பு வாழ்க்கைபாதிப்பு
அமெரிக்காவின் மத்திய மேற்கு மாகாணங்களில் கடுமையான பனிப்புயல் வீசி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. லிங்கன், ...


அமெரிக்காவின் மத்திய மேற்கு மாகாணங்களில் கடுமையான பனிப்புயல் வீசி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. லிங்கன், பெப்ராஸ்கா உள்ளிட்ட பகுதிகளில் பனிப்புயலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. சாலைகளில் 30 செ.மீ. வரை பனிப் படர்ந்துள்ளதால் வெளியே வர முடியாமல் மக்கள் வீட்டிற்குள் முடங்கியுள்ளனர். இதுவரை 20 ஆயிரம் பேர் காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நெடுஞ்சாலைகளிலும் பனிப் படர்ந்துள்ளதால் பல்வேறு இடங்களில் வாகன விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. விபத்துகள் பெருகி வருவதால் சாலைகளில் ஆங்காங்கே மீட்பு குழுவினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். சிக்காக்கோ பகுதியில் அதிகபட்சமாக 45 செ.மீ. வரை பனிப் படர்ந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மோசமான வானிலை காரணமாக 2,100 விமானங்கள் வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. ஓஸ்டன், டெட்ரோன்ட் உள்ளிட்ட நகரங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.