தாக்குதலில் ஈடுபட்ட காவற்துறையினர்க்கு ஐந்தாண்டு சிறை!!
எந்தக் காரணமும் இல்லாமல் மிக்கேய்ல் எனும் இளைஞனை மோசமான வன்முறையுடன் தாக்கிய குற்றத்தடுப்புப் பிரிவின் (Brigade anti-criminalité - BAC) க...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_866.html

எந்தக் காரணமும் இல்லாமல் மிக்கேய்ல் எனும் இளைஞனை மோசமான வன்முறையுடன் தாக்கிய குற்றத்தடுப்புப் பிரிவின் (Brigade anti-criminalité - BAC) காவற்துறை அதிகாரி ஒருவரிற்கு ஐந்தாண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அதில் மூன்று வருடங்கள் கடுங்காவற்சிறைத் தண்டனை என சம்பெரி நீதிமன்றம் தீரப்பளித்துள்ளது. இவரது தீர்ப்பு கடந்த நான்காம் திகதி அறிவிக்கப்பட்டது.
23ம் திகதி ஏப்ரல் மாதம் 2010ஆம் ஆண்டு, இரவு, இந்தத் தண்டனை பெற்ற நபராலும் அவரது சகாக்களாலும் அவர்களின் காவற்துறைத் தாக்குதல் சுத்தியல் போன்ற தடியினால் (matraque), இந்த இளைஞன் பலத்த தாக்குதலிற்கு உள்ளாகி உள்ளார்.
தாக்குதலின் இறுதியில் பெரும் காயங்களினால் மிக்கேய்ல் கோமா நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளர். கீழே வீழ்ந்த பின்னும் இவர்மீது தொடர் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது
இதன் தொடர்ச்சியாக மிக்கேய்ல் ஊனமுற்றவர் ஆக்கப்படார்.
நான் வாழ்நாள் முழுவதிற்கும் ஊனமுற்றவன் ஆக்கப்பட்டுள்ள்ளேன். எனது வலது பக்கம் முழுவதும் செயலிலழந்து விட்டது (hémiplégique).
நான் என் கைகளைக்கூட அசைக்க முடியாது. ஒரு ஊன்று கோலின் உதவியுடன் மட்டுமே நான் மிகவும் சிரமப்பட்டுச் சிறிதளவு நடக்கின்றேன.
தாக்குதலின் போது என் தலையில் பெரும் துளை ஒன்று ஏற்பட்டது. இப்பொழுது எனது மண்டை ஓட்டின் ஒரு பகுதியில் இரும்புத் தகடு பொருத்தப்பட்டுள்ளது. என்னால் பேசக்கூட முடியவில்லை' எனத் தெரிவித்துள்ளார்.
தண்டனை வழங்கப்பட்ட குற்றவியற் தடுப்புப்பிரிவின் காவற்துறையினன், எக்காலத்திலும் காவற்துறையில் கடமையாற்றத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 'அதிகாரமுடைய ஒருவர் ஒரு பொதுமகன் மீது ஆயுதப்பிரயோம் செய்தமை' என்ற குற்றத்தின் அடிப்படையில் இவர் சிறையில் இடப்பட்டுள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate