மைத்திரிக்கு அச்சுறுத்தல் கொடுக்க கோத்தபாயவின் உளவாளிகள் ஊடுவல்

 மைத்திரி தலைமையிலான அரசாங்கத்தை சீர்குலைக்க கோத்தபாய ராஜபக்ஷ சதி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.    இதற்காக சிறில...

 மைத்திரி தலைமையிலான அரசாங்கத்தை சீர்குலைக்க கோத்தபாய ராஜபக்ஷ சதி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
 இதற்காக சிறிலங்காவின் புலனாய்வு பிரிவுக்குள் கோத்தபாயவின் உளவாளிகள் ஊடுவியுள்ளதாக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
 புதிய அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு தடை ஏற்படுத்தி வருவதுடன் வெளிநாடுகளுடன் ஏற்படுத்தி வரும் சிறந்த தொடர்புகளை சீர்குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்களோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக மங்கள தெரிவித்துள்ளார்.
அண்மையில் சிறிலங்காவுக்கு வந்த 10 தமிழர்கள் கட்டுநாயக விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட சம்பவங்கள் குறித்தும் ஒரு வருடங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெயக்குமாரி பாலேந்திரன் சம்மந்தமாகவும் உடனடியாக சட்டத்தை செயல்படுத்துமாறு சர்வதேச ரீதியில் கொடுக்கப்படும் அழுத்தங்கள் குறித்து மங்கள கருத்து வெளியிட்டுள்ளார்.
 ஜெயக்குமாரிக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் இல்லையென்றால் அவரை தமது வடக்கு விஜயத்திற்கு முன்னதாக விடுவிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவித்திருந்த போதிலும் புலனாய்வுப் பிரிவினர் இதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மற்றும் மங்கள சமரவீரகவுக்கு இடையில் மனித உரிமைகள் தொடர்பில் விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில், பிரான்ஸ் பிரஜைகள் இருவர் சிறிலங்கா புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். 
 இதில் 42 வயதான தாயும் எட்டு வயதான மகளும் அடங்கும். முருகேசு பகீரதி என்ற பெண் சிறிலங்காவில் சில வாரங்கள் தங்கியிருந்த போதும் யாரும் அவரை கைது செய்ய முயற்சிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.
 அதேவேளை ஐ.நா மனிதவுரிமை பேரவையில் உரையாற்றிய மங்கள சமரவீர முந்தைய அரசாங்கத்தின் சில அதிகாரிகள் தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு தடை ஏற்படுத்தி வருவதாக குறிப்பிட்டிருந்தார்.

Related

இலங்கை 3249465292425803028

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item