நானே ராஜா! அரசியல் பழிவாங்கல்களை நிறுத்துங்கள்! கொந்தளிக்கும் மஹிந்த
ஜனாதிபதி தேர்தலின் போது தனக்கு ஆதரவாக வாக்களித்தவர்கள் மீது அரசியல் பழி வாங்கல்கள் இடம்பெறுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவி...

http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_396.html

ஜனாதிபதி தேர்தலின் போது தனக்கு ஆதரவாக வாக்களித்தவர்கள் மீது அரசியல் பழி வாங்கல்கள் இடம்பெறுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அரசியல் பழிவாங்கல்களை உடனடியாக நிறுத்துமாறு மஹிந்த, மைத்திரி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் மஹிந்த மேலும் தெரிவிக்கையில்,
இவர்கள் அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளாகியுள்ளனர். அத்துடன் தொழில்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்த அரசியல் பழிவாங்கல்கள் காரணமாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர் வெறுப்படைந்துள்ளனர்.
இந்த அரசியல் பழிவாங்கலையும், மக்களை பழிவாங்குவதையும் நிறுத்தி விட்டு செயற்படுமாறும் அவர்கள் எதிர்பார்த்த 100 நாள் வேலைத்திட்டத்தை செயற்படுத்தட்டும்.
கண்டியில் நடைபெறுவது சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஆதரவான மக்கள் கூட்டம் எனவும் அதனை மிரட்டல்கள் மூலம் நிறுத்த முடியாது.
ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்திற்கு எதிராக எவரும் தற்போது குரல் கொடுப்பதில்லை எனவும் அந்த கூட்டத்தை ஏற்பாடு செய்பவர்கள் மாத்திரமே அரசாங்கத்திற்கு எதிராக குரல் கொடுக்கின்றனர்.
இதேவேளை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உண்மையான தலைவர் தானே என மஹிந்த மார்தட்டியுள்ளார். அதிகாரபூர்வமான சுதந்திரக் கட்சியினர் தம்முடனேயே இணைந்திருப்பதாகவும் மஹிந்த தெரிவித்துள்ளார்.