தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகளை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார் நிஷாபிஸ்வால்
தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால், தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் பிர...


தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குமான அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வாலிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெற்றது.
அமெரிக்க தூதுவர் இல்லத்தில் இன்று காலை இந்த சந்திப்பு இடம்பெற்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தி, கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்,பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சுரேஷ் பிரேமசந்திரன் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.
இதேவேளை, தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடல்களை இன்று நடத்தினார்.
சிறுபான்மை மக்களின் எதிர்காலம் குறித்து இந்த சந்திப்பின் போது அதிக கவனம் செலுத்தப்பட்டதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.