சட்டத்தை அனைவருக்கும் ஒரே விதத்தில் அமுல்படுத்துக
சட்டத்தை அனைவருக்கும் ஒரே விதத்தில் அமுல்படுத்துக : ஹிருணிக்கா பிரேமச்சந்திர மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர இன்று (11) ஊ...


மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர இன்று (11) ஊடகவியலாளர் சந்திப்பொன்றை எற்பாடு செய்து சட்டத்தை அனைவருக்கும் ஒரே விதத்தில் அமுல்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் தெரிவித்ததாவது;
துமிந்த சில்வாவின் போதைப் பொருள் விநியோகம் தொடர்பில் எனது தந்தை வெளிப்படுத்தியமையே அவரின் கொலைக்குக் காரணமாக அமைந்தது. இவ்வாறு இருக்கும் போதும் ஏன் இந்த நபரை கைது செய்வதில்லை என்பது தான் எனது கேள்வி. போலி ஆவணம் தொடர்பில் அண்மையில் திஸ்ஸ அத்தநாயக்க கைது செய்யப்பட்டார். போலி ஆவண குற்றச்சாட்டுடன் ஒப்பிடுகையில் இந்த நாட்டில் போதைப் பொருள் விநியோகம் மற்றும் அதற்கு துணைபோதல் என்பன பாரிய குற்றச்சாட்டாகும். எவரேனும் இதில் கைது செய்யப்பட்டால் பிணை வழங்கப்பட மாட்டாது. இது வேடிக்கையாக இருக்கின்றது. இது மக்களுக்கு பிரச்சினையாக உள்ளது.என்றார்.
அத்துடன், குற்றங்கள் நிறுத்தப்படும் குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பில் தான் மக்கள் தமக்கு வாக்களித்திருப்பதாகவும் ஊழல் மிகுந்த அரசாங்கத்தில் குற்றமிழைத்தவர்கள் பாதுகாப்பாக இருந்தார்கள், நல்லாட்சியிலும் பாதுகாப்பாக இருக்கின்றார்கள் என மக்கள் கருதுவதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், தனது தந்தையின் கொலை தொடர்பில் மேல் நீதிமன்றத்தில் சாட்சிகளை முன்நிறுத்த வேண்டும் என வலியுறுத்திய ஹிருணிக்கா பிரேமச்சந்திர, குற்றமிழைத்தால் எவராக இருந்தாலும் அது குற்றம் தான் எனவும் சுட்டிக்காட்டினார்.
‚