முழு பாராளுமன்றத்தையும் அரசாங்கமாக்குவதே எமது நோக்கம் : ரணில்
பாராளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மைப் பலத்தைப் பெற்று அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைத்து முழு பாராளுமன்றத்தையும் அரசாங்கமாக்குவதே தமது நோ...

ஐக்கிய தேசியக்கட்சி தனியாக போட்டி யிடும்: கபீர் ஹாசிம்
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி தனியாக போட்டி யிடும் அதேவேளை கட்சியில் இணைந்து போட்டியிட யாரும் விரும்பினால் அவர்களுக்கும் கட்சியில் வாய்ப்பு வழங்கப்படும் என்று நெடுஞ்சாலைகள்இ உயர்கல்வி, முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சரும், ஐக்கிய தேசியக்கட்சியின் செயலாளருமான கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார் .
இதேவேளை இம்முறை நடைபெற வுள்ள பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி வரலாறு காணாத வெற்றி பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமை யகமான சிறிகொத்தவில் விசேட செய்தியாளர் மாநாடு நேற்று நடைபெற்றது. இதன் போது ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.