கோத்தாவிடம் இன்று குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணை
தனியார் ஆயுதக் களஞ்சியங்கள் தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாவிடம் இன்று குற்றப்புலனாய்வு திணைகளத்தின் அதிகாரிகள் விசாரணை மேற்க...
http://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_199.html
தனியார் ஆயுதக் களஞ்சியங்கள் தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாவிடம் இன்று குற்றப்புலனாய்வு திணைகளத்தின் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளர். முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்சவிடம் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் குழுவொன்று இன்றைய தினம் வாக்குமூலம் பெற்று கொண்டுள்ளது.கோத்தாவின் வீட்டில் வைத்து, இந்த வாக்கு மூலம் பெற்று கொள்ளப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் அஜித் ரோகன தெரிவித்துள்ளார்.ரக்னா லங்கா மற்றும் எவன்காட் தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் தொடர்பிலே விசாரணை நடத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில்இ நாளைய தினமும் கோட்டபய ராஜபக்சவிடம் வாக்கு மூலம் பெறப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எவன்காட் தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனம் குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொண்டு காலித்துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த ‘மஹநுவர” என்ற கப்பலில் இருந்து 3 ஆயிரத்து 154 ஆயுதங்கள் மீட்கப்பட்டிருந்தன.இதுதவிர, 7 லட்சத்து 47 ஆயிரத்து 859 பலரக தோட்டாக்கள் முன்னதாக காவல் துறையினரால் மீட்கப்பட்டிருந்தன.
ரக்னா லங்கா தனியார் பாதுகாப்பு நிறுவனத்திற்கு உட்பட்ட ஆயுத களஞ்சிய சாலை ஒன்று, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் இருந்து மீட்கப்பட்டது. ஸ்ரீஜயவர்தனபுர-கோட்டே மாநகர சபை உறுப்பினர் ஒருவரினால், செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய சோதனைகளை மேற்கொண்ட காவல்துறையினர் அங்கிருந்து ரி56 ரக 44 ஆயுதங்களை கைப்பற்றினர்.
இது தவிர, எல்.எம்.ஜி. ரக 32 ஆயுதங்களும் 151 பல ரக ஆயுதங்களும் மீட்கப்பட்டிருந்தன. இந்த களஞ்சிய சாலைக்குள் 6 ஆயிரத்து 158 நானாவித ஆயுதங்களை களஞ்சியப்படுத்த கடந்த கால பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது


Sri Lanka Rupee Exchange Rate