கோடிக்கணக்கான டொலர்களை அமெரிக்காவில் கொட்டிய மஹிந்த!
சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி தன்னிச்சையான முறையில் கோடிக்கணக்கான மக்களின் பணத்தை, தரகர்களுக்கு வழங்கியதாக கொழும்பு ஊடகமான சண்டேடைம்ஸ் தகவ...


சிறிலங்காவின் நன்மதிப்பை அமெரிக்காவில் அதிகரிக்கும் நோக்கில் தரகர் ஒருவருக்கு 1.39 பில்லியன் ரூபாவை வழங்கப்பட்டுள்ளது. இதற்காக அமைச்சரவையின் அனுமதி பெற்றுக்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் நன்மதிப்பை உயர்ந்தும் நோக்கில் தரகராக செயற்பட்ட இமாட் சுப்ரி என்பவருக்கு மாத்திரம் இவ்வாறு 1.39 பில்லியன் ரூபாய்கள் வழங்கப்பட்டுள்ளன.
சுப்ரி, அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு நெருக்கமானவர். இவரை பாகிஸ்தானின் முன்னாள் நிதியமைச்சர் சலிம் மந்தாவிவல முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
இந்தநிலையில் சுப்ரிக்கு மொத்தமாக 4.5 மில்லியன் டொலர்கள் கொடுப்பனவாக செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் அரசாங்கத்தின் வெளியுறவுத்துறை கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தனவே சுப்ரியுடன் தொடர்புகளை பேணிவந்தார்.
இந்தநிலையில் அமைச்சரவை அங்கீகாரம் இல்லாமலேயே ஜனாதிபதி செயலகம் நேரடியாக மத்திய வங்கிக்கு விடுத்த பணிப்புரையின் பேரில் சுப்ரிக்கான தரகுப்பணம் வழங்கப்பட்டுள்ளது.
இதனைதவிர, அமெரிக்காவின் டபில்யூ குழுவுக்கு 2 மில்லியன் டொலர்களும் நெல்சன் முல்லின்ஸ் ரிப்லி மற்றும் ஸ்கர்போரோ நிறுவனத்துக்கு 4.15 மில்லியன் டொலர்களையும் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் ஜனாதிபதி செயலகம் நேரடியாக வழங்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் மைத்திரி தலைமையிலான புதிய அரசாங்கம் விசாணைகளை முன்னெடுத்துள்ளது.