சென்னை பெண் போலீசுடன் ‘செக்ஸ்’ உரையாடல்: போலீஸ் உதவி கமிஷனர் மீது விசாரணை- கமிஷனர் ஜார்ஜ் உத்தரவு
செல்போனில் பெண் போலீசுடன் செக்ஸ் உரையாடலில் ஈடுபட்ட உதவி போலீஸ் கமிஷனர் மீது விசாரணை நடத்த கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். வட சென்னை கூட...

http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_277.html

செல்போன் செக்ஸ் உரையாடல்
தமிழக போலீசை தற்போது கதி கலங்க வைத்துள்ளது செல்போன் ‘வாட்ஸ்அப்பில்’ பரவி உள்ள அந்த ஆடியோ உரையாடல் தான். அந்த உரையாடலில் சென்னையில் பணியாற்றும் உதவி போலீஸ் கமிஷனர் ஒருவர், தனது கடமை-கண்ணியம்-கட்டுப்பாட்டை மறந்து, தனது தகுதியை விட்டு இறங்கி வந்து பெண் போலீஸ் ஒருவருடன் காதல் ரசம் சொட்டும் செக்ஸ் வசனங்களை பேசுகிறார்.
தனியாக வெளியில் சந்திப்போம், என்று செல்போனில் அழைப்பு விடுக்கிறார். செல்போனில் ஒண்ணு (முத்தம்) தரவா என்றும் கேட்கிறார். அந்த பெண் போலீஸ் அணிந்துள்ள ஆடையை கூட எப்படி அணிய வேண்டும் என்று ஆலோசனை சொல்கிறார்.
நேற்று சென்னை போலீஸ் வட்டாரம் முழுவதும் இந்த பேச்சு தான்.... உயர் அதிகாரிகள் முதல், போலீஸ்காரர்கள் வரை இந்த செல்போன் உரையாடலை ‘வாட்ஸ்அப்பில்’ பரவ விட்டு கேட்டுக்கொண்டிருந்தனர். பொதுமக்கள் மத்தியிலும் கூட இந்த பேச்சு பரபரப்பாக பேசப்பட்டது.
ஓய்வு வயதை நெருங்குபவர்..
உரையாடலுக்கு சொந்தக்காரரான உதவி கமிஷனர் 50 வயதை தாண்டி ஓய்வை நெருங்கிக்கொண்டிருப்பவர். 1987-ம் ஆண்டு சப்-இன்ஸ்பெக்டராக வேலைக்குச் சேர்ந்தவர். அவரது குடும்பம் கவுரவமான குடும்பம். மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகன் பல் டாக்டருக்கு படித்துக்கொண்டிருக்கிறார். மகள் என்ஜினீயரிங் மாணவி.
செக்ஸ் தொல்லைக்கு ஆளான பெண் போலீசும் திருமணம் ஆகி 2 குழந்தைகளுக்கு தாய். உதவி கமிஷனருக்கும், அந்த பெண்போலீசுக்கும் 20 வயதை தாண்டி வித்தியாசம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அந்த பெண் போலீஸ் இதுவரை எந்த வித புகாரும் கொடுக்கவில்லை.
விசாரணை நடத்த உத்தரவு
இருந்தாலும் ‘வாட்ஸ்அப்பில்’ தனது செல்போன் நம்பரையும் கொடுத்து, தொல்லை கொடுத்த உதவி கமிஷனரின் செக்ஸ் லீலைகள் பற்றி அதிரடி விசாரணை நடத்திட கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். வடசென்னை கூடுதல் கமிஷனர் வி.ஏ.ரவிக்குமார், இந்த விசாரணையை நடத்துகிறார். சம்பந்தப்பட்ட உதவி கமிஷனர், பெண் போலீஸ், பெண் போலீசின் தோழிகள் உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடக்கிறது.
அவர் கொடுக்கும் அறிக்கை அடிப்படையில் உதவி போலீஸ் கமிஷனர் மீது இலாகா பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை போலீஸ் உயர் அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஏற்கனவே சென்னை போலீசில், 2 உதவி கமிஷனர்கள் இதுபோல் செக்ஸ் லீலை குற்றச்சாட்டில் சிக்கினார்கள். வெறும் விசாரணையுடன் அவர்கள் தப்பி விட்டனர். ஒரு உதவி கமிஷனர் பெண் இன்ஸ்பெக்டரின் சட்டைப்பையில் இருந்து பேனாவை எடுப்பது போல தகாத செயலில் ஈடுபட்டார். இன்னொரு உதவி கமிஷனர் தன்னிடம் வேலை பார்த்த பெண் சப்-இன்ஸ்பெக்டரிடம் தப்பாக நடக்க முயன்றார். அந்த 2 சம்பவங்களிலும் பாதிக்கப்பட்டவர்களால் புகார் கொடுக்கப்பட்டது. எச்சரிக்கை மட்டும் அந்த உதவி போலீஸ் கமிஷனர்களுக்கு விடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.