கடும் கோபத்துடன் பாதுகாப்புச் செயலாளரை தொலைபேசியில் தொடர் கொண்ட சந்திரிக்கா
பாதுகாப்புச் செயலாளர் பீ.எம்.யூ.டி. பஸ்நாயக்கவை அந்த பதவியில் இருந்து நீக்க வேண்டும் எனவும் அது குறித்து தான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...


கடந்த வாரம் நடைபெற்ற தேசிய நிறைவேற்றுச் சபைக் கூட்டத்தில் அவர் இதனை கூறியுள்ளார்.
தற்போதைய பாதுகாப்புச் செயலாளர், பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் வெளிநாட்டுக்கு செல்ல உதவும் வகையில் கடிதத்தை வழங்கியமை, குற்றப் புலனாய்வுத் திணைக்களம், விசாரணை நடத்தி வரும் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் தமயந்தி ஜயரத்னவுக்கு விடுமுறை வழங்கியுள்ளதாக குற்றம் சுமத்தப்படுகிறது.
அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஷங்க சேனாதிபதி வெளிநாடு செல்ல உதவும் வகையில் கடிதம் ஒன்றை வழங்கியமை தொடர்பில் சந்திரிக்கா, பாதுகாப்புச் செயலாளரிடம் வினவியுள்ளார்.
அத்துடன் விடுமுறை தினமான ஞாயிற்றுக் கிழமை அலுவலகத்திற்கு சென்று கடிதம் ஒன்றை தயார் செய்வது பாதுகாப்புச் செயலாளரின் பணியல்ல எனவும் சந்திரிக்கா, பஸ்நாயக்கவிடம் கூறியுள்ளார்.