நிர்நதர தீர்வை பெற்றுக்கொள்ள தமிழ், முஸ்லிம் ஒற்றுமை இன்றியமையாதது

இலங்கை நாட்டில் தமிழ் பேசும் மக்கள் ஒரு நிர்நதரமான தீர்வை பெற்றுக்கொள்ள தமிழ், முஸ்லிம் மக்களின் ஒற்றுமையும், ஒத்துழைப்பும் இன்றியமையாதத...

இலங்கை நாட்டில் தமிழ் பேசும் மக்கள் ஒரு நிர்நதரமான தீர்வை பெற்றுக்கொள்ள தமிழ், முஸ்லிம் மக்களின் ஒற்றுமையும், ஒத்துழைப்பும் இன்றியமையாதது என்று அகிலஇலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
வவுனியா விபுலானந்தா கல்லூரியில் இன்று இடம் பெற்ற  5 ஆம் ஆண்டு பலமைப்பரிசில் பரீட்சையில்  சித்தியெய்திய மாணவர்களை பாராட்டும் விழா பாடசாலை அதிபர் தனபாலசிங்கம் தலைமையில் இடம் பெற்ற போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
நடை பெற்ற  பரீட்சையில் 86 மாணவர்கள் சித்தியெய்தினர்.
மேலும் அமைச்சர் பேசுகையில் கூறியதாவது –
இந்த நாட்டில் இன ஒற்றுமையினை விரும்பும் மக்கள் அதிகமாக வாழ்கின்றனர்.அதற்கு நல்லதோர் உதாரணமாக இநடத பாடசாலையினை கூறுவதையிட்டு நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.
கல்வி என்பது சமூகத்தின் சிறந்த மக்கள்  அமைப்பை உருவாக்கும் ஓர் ஆயுதமாகும்.ஒழுக்கமும்,சீறிய பண்பும் கொண்டவர்கள் இந்நத பாடசாலைகள் மூலம் வெளிவருகின்றனர்.பல் துறை சார்ந்தவர்கள் இவ்வாறான கற்றை நிலையங்கள் மூலம் வருவது எமது நாட்டுக்கும், பிரதேசத்திற்கும் கிடைத்த பெரும் வரப்பிரசாதமாகும்.
சிறுபான்மை சமூகம் இன்று எதிர் கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வை காண இந்த நல்லாட்சி அரசாங்கத்தை பயன்படுத்தி  கொள்ள வேண்டும்.கடந்த காலங்களிலும் எனது அமைச்சுப் பதவிகளை கொண்டு இந்த வவுனியா மாவட்டத்தின் அபிவிருத்திக்கும், இன ஒற்றுமைக்கும் தேவையான அடித்தளத்தினை இட்டுள்ளோம்.எமக்கிடையில் காணப்புடம் கருத்தொன்றுமையின் நாம் இந்த மாவட்டத்தை இன்னும் சகல துறைகளிலும் அபிவிருத்தி காண செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
இந்த பாடசாலையானது இந்த நாட்டுக்கே ஒரு நல்ல செய்தியினை சொல்லியுள்ளது.இந்த பாடசாலையில் இருந்து ஓய்வு பெற்ற ஆசிரியை ஒருவர், அந்த ஓய்வு காலத்திலும் எவ்வித கொடுப்பனவுகளும் பெறாமல் இலவசமாக  வந்து மீண்டும் கல்விசார் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குகின்றார்.அதற்கு இந்த மாவட்ட மக்களின் பிரதி நிதி என்ற வகையில் எனது நன்றியினை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.
இன்றைய காலமானது பணத்தினையும், ஏனைய பதவிகளையும் குறி வைத்து துரத்தி செல்லுகின்ற வேளையிலும், கற்றவர்களை உருவாக்க அதிபர் , ஆசியர்கள், மற்றும் பெற்றோர்கள் ஒன்றினைந்து சிறந்த கல்வியாளர்களை இன்று இந்த வவுனியா மாவட்டத்தில் சமர்ப்பணம் செய்துள்ளதை காண்கின்ற போது இதை விட எமது மாவட்டம் வேறு எந்த துறையில் முன்னேற்றம் காண வேண்டும் என்று குறிப்பிடவிரும்பு கின்றேன்.
கல்வி என்பது இன, மதங்களுக்கு அப்பால் மனித நேயம் கொண்டவர்களை உருவாக்கும் தளமாகும், இந்த ஆசிரிய பணியினை மேதற்கொள்பவர்கள் சமூகத்தில் உயர் அந்தஸ்த்துக்குரியவர்கள் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் இங்கு கூறினார்
இந்த  நிகழ்வில் வவுனியா தெற்கு வலய பிரதி கல்வி பணிப்பாளர் திருமதி.எஸ்.அண்ணமலர்,பரந்தன் இராசயன கூட்டுத்தாபனத்தின் இயக்குநர் ஷாஹிப் மொஹிதீன், அமைச்சரின் இணைப்பு செயலாளர் முத்து மொஹம்மத்,இணைப்பளார் அப்துல் பாரி உட்பட  பலரும’ கலந்து கொண்டனர்

Related

கடந்த அரசாங்கம் விட்ட பிழைகளை நல்லாட்சி அரசாங்கமும் விடுகின்றது!– பெபரல் பணிப்பாளர்

கடந்த அரசாங்கம் விட்ட பிழைகளை நல்லாட்சி அரசாங்கமும் விடுகின்றது என பெபரல் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. தேர்தல் காலத்தில் கடந்த மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் செய்த அதே பிழைகளை, நல்லாட்சி மைத்திரிபால அரசா...

அரசியலும் வேண்டாம் அமெரிக்க குடியுரிமையும் வேண்டாம்! கோத்தபாய அதிரடி

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தேர்தலில் போட்டியிட போவதாக...

ஐ.தே.கவின் அதிகாரத்தை தடுப்பதற்காகவே மஹிந்த இணைத்துக் கொள்ளப்பட்டார்: ஜனாதிபதி

முன்னாள் ஜனாதிபதிக்கு வேட்பு மனு வழங்குவதற்கு தீர்மானித்ததற்கான காரணம் ஐக்கிய தேசியக் கட்சி 3ல் 2 அதிகாரம் பெற்றுக்கொள்வதனை தடுப்பதற்காகவே என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தன் கட்சி ...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item