பொலிஸ் மற்றும் நீதித்துறை ஆணைக்குழுக்கள் விரைவில்
நாட்டில் சட்டத்தை அமுல்படுதுவதற்கு அந்நாட்டில் சுயாதீன பொலிசும் ,சுயாதீன நீதிமன்றமும் இருத்தல் வேண்டும் ,எனவே நல்லாட்சியை ஏற்படுத்தும் வகையி...


பிரதி அமைச்சர் பதவியேற்பை அடுத்து கண்டிக்கு விஜயம் செய்து ஸ்ரீ தலதாமாளிகையில் வழிப்பட்டு ஊடகங்களுக்கு அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார் . அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
நாட்டில் சாதாரண சமூகம் ஒன்று உருவாக வேண்டுமாயின் நாட்டிலுள்ள சகல பிரஜைகளுக்கும் ஒரே தன்மை பொருந்திய சமமான சட்டங்கள் அமுல் படுத்தப்பட வேண்டும். அதற்கான சகல விடயங்களும் மேற்கொள்ளப்படும்.
நாட்டில் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு அந்நாட்டில் சுயாதீன பொலிஸும் சுயாதீன நீதிமன்றமும் இருத்தல் வேண்டும். அதற்கு இணையாக குற்றப் புலனாய்வுப் பிரிவும், சட்டமா அதிபர் திணைக்களமும் அத்துடன் முப்படைகளும் சுயாதீனமாக இயங்க வேண்டும். எனவே அவற்றை சுயாதீனமாக இயங்குவதற்குரிய சூழலை உருவாக்குவோம்.என தெரிவித்துள்ளார்