சிறுமிக்கு இரண்டு மாத சிறை , 1500 டொலர் அபராதம் : ஆக்கிரமிப்பு இஸ்ரேலின்மற்றுமொரு சாதனை
பலஸ்தீன் மேற்கு கரை பிரதேசத்தில் சியோனிச ஆக்கிரமிப்பு குடியேற்றக்காரர்கள் சென்ற கார்கள் மீது கற்களை வீசி தனது எதிர்ப்பை தெரிவித்த 14 வயது சி...


ஆக்கிமிப்புக்களுக்கு எதிராக தமக்கு முடிந்த வகையில் எதிர்ப்பை காட்டும் இளைஞர்களுக்கு எதிரான இஸ்ரேலின் மிதமிஞ்சிய நடவடிக்கையாக இது உள்ளதாக பலஸ்தீனர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய அதிகாரிகளால் கடந்த மாதம் கைது செய்யப்பட்ட மாலக் –- அல் காடிப் இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டு தண்டனை விதிப்புக்குள்ளான சிறுமிகளில் இவளும் உள்ளடக்கப்படுகிறார்
கடந்த டிசம்பர் 31 ஆம் திகதி இஸ்ரேலியர்களாலும் பலஸ்தீனர்களாலும் பயன்படுத்தப்படும் மேற்குக்கரை வீதியினூடாக நடந்து சென்ற மாலக், அவ்வழியாக சென்ற சியோனிச யூத ஆக்கிரமிப்பளர்களின் கார்கள் மீது சிறுமி கற்களை வீசியுள்ளார்
மாலக்கிற்கு 2 மாத சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக 1500 டொலர் தண்டப்பணத்தை செலுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தனது 14 வயது மகள் படையினருக்கு எதுவித அச்சுறுத்தலாகவும் இருக்கவில்லை எனவும் பயிற்சி பெற்ற ஆயுதங்கள் ஏந்திய அந்த படையினர் தனது மகளால் என்ன அச்சுறுத்தலை எதிர்கொண்டார்கள் என்பது புரியவில்லை என மாலக்கின் தந்தையான அலி அல் – காடிப் தெரிவித்துள்ளார்
மாலக் மீது கற்களை வீசியமை, கற்களை வீச முயன்றமை, கத்தியொன்றை உடைமையாக வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
தற்போது இஸ்ரேலில் 5500 பலஸ்தீனர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர்களில் ஆண்கள் மற்றும் பெண்கள் ,சிறுவர் ,சிறுமியர் எனவும் கூறப்படுகின்றது. இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் சுமார் 150 பேர் சிறுவர்களாவர்.