சுதந்திரக் கட்சி தலைவர்களின் கோஷத்தை நிறுத்துவேன்: ஜனாதிபதி
எந்த நபருடைய தனிப்பட்ட கொள்கைக்காகவும் தான் செயற்படுவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் இன்று இடம்பெ...

http://kandyskynews.blogspot.com/2015/05/blog-post_78.html

பொலன்னறுவையில் இன்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கூட்டத்தில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தான் நாட்டின் தலைவர் என்ற ரீதியில் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுப்பதற்கு முன் நிற்பதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையில் காணப்பட்ட அதிக்கூடிய அதிகாரங்களை நீக்கிவிட்டு 37 வருடங்களாக நாட்டு மக்கள் கேட்டுக்கொண்ட அரசியல் மாற்றம் ஏற்படுத்திகொடுக்கப்பட்டது.
இது போன்று, சுதந்திர கட்சியின் அனைத்து அரச தலைவர்களின் கோஷம் நிறைவடைய தான் செயற்படுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை வலுவடைய செய்தமை போன்று,
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினுள் ஜனநாயகத்தை கட்டியெழுப்பி அதிகூடிய பலம்மிக்க உறுப்புரிமை கிடைக்கும் வகையில் கட்சியை பலப்படுத்துவதாக ஜனாதிபதி அங்கு மேலும் தெரிவித்துள்ளார்.