மஹிந்தவின் சொத்து திருட்டு தொடர்பில் அமெரிக்காவில் விசாரணைகள் ஆரம்பம்
மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் நாட்டின் சொத்துக்கள் திருடப்பட்டதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில், அமெரிக்கா விசாரணைகளை ஆரம்...

http://kandyskynews.blogspot.com/2015/05/blog-post_31.html

இது தொடர்பில் ஆராய அமெரிக்க விசாரணை அதிகாரிகள் கடந்த வாரம் இலங்கைக்கு வந்திருந்தனர்.
இலங்கையில் இருந்து திருடப்பட்ட சொத்துக்கள் அமெரிக்காவில் முதலீடு செய்யப்பட்டுள்ளமை தொடர்பிலேயே இந்த விசாரணைகள் நடத்தப்படவுள்ளன.
அமெரிக்காவின் விசாரணைக்குழுவில் எப்பிஐ அதிகாரி ஒருவர், குடிவரவுத்துறை அதிகாரி ஒருவர், உள்ளக பாதுகாப்பு அலுவலக அதிகாரி ஒருவர் ஆகியோர் அடங்கியுள்ளனர்.
மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இலங்கையில் இருந்து 10 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நாட்டில் இருந்து திருடப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை முன்னைய அரசாங்கத்தினால், துபாய், சீசெல்ஸ், நெதர்லாந்து ஆகிய இடங்களில் சொத்துக்களை சேர்த்து வைத்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.