யூதர்கள் மீது நடக்கும் தொடர் தாக்குதல்கள்: அச்சத்தில் தவிக்கும் சுவிஸ்மக்கள்

யூதர்களை குறிவைத்து நடைபெற்று வரும் தொடர் தாக்குதல்களால், சூரிச் நகர யூத மக்கள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகியிருப்பதாக யூத அமைப்புகள் வேதனை த...

யூதர்களை குறிவைத்து நடைபெற்று வரும் தொடர் தாக்குதல்களால், சூரிச் நகர யூத மக்கள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகியிருப்பதாக யூத அமைப்புகள் வேதனை தெரிவித்துள்ளன.பாரிஸ் பத்திரிக்கை அலுவலகம், Copenhagen துப்பாக்கி சூடு தாக்குதலை தொடர்ந்து, சூரிச்சில் உள்ள யூத மக்களை குறிவைத்து தீவிரவாத தாக்குதல் நடத்தப்படுமா என்ற அச்சத்தில் யூத மக்கள் உள்ளதாக யூத அமைப்புகளின் தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பேசிய Jewish group IRGZ என்ற அமைப்பின் உறுப்பினர் Berhard Korolnik, யூத சமுதாயத்தை சேர்ந்த மக்களிடம் இந்த அச்சம் இருப்பது தெளிவாக தெரிவதாக தெரிவித்துள்ளார்.
Liberal Jewish Congregation என்ற அமைப்பின் பொது செயலாளர் Susi Saitowitz கூறுகையில், யூதர்கள் அடிக்கடி தாக்குதலுக்கு உள்ளாவதால், எதிர்காலத்தில் சூரிச்சில் உள்ள யூதர்களும் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளாகலாம் என்றார்.
தாக்குதலுக்கான அச்சமும் கவலையும் மக்களிடையே நன்கு காணப்படுவதால் தாங்கள் எப்பொழுதும் பொலிசாரை அடிக்கடி தொடர்புக்கொண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
Jewish Cultural Centre of Zurich உள்ளிட்ட பல யூத அமைப்புகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளதால், பல யூத குடிமக்கள் எச்சரிக்கையுடனும் தாக்குதலுக்குரிய அச்சம் இல்லாமலும் இருப்பதாக Jewish Cultural Centre of Zurich அமைப்பின் பொதுச்செயலாளர் Frédéric Weil தெரிவித்துள்ளார்.
யூதர்கள் அணியும் சிறு குல்லாவுடன் பொது இடத்திற்கு சென்றால், தன்னை அறியாமலேயே எச்சரிக்கையுடன் இருக்குமாறு தோன்றுவதாகவும் அது போன்ற உணர்வு இதற்கு முன்பு இருந்ததில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Swiss Federation of Jewish அமைப்புகளின் தலைவரான Jonathan Kreutner, சுவிஸில் வாழும் யூதர்களின் பாதுகாப்பு நிலைப்பாடு குறித்து அரசு அதிகாரிகள் உறுதிபடுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய சூரிச் மாநகர காவல்துறையின் செய்தி தொடர்பாளர் Judith Hödl, யூதர்களின் பாதுகாப்பு குறித்து காவல்துறை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அவசியமான நேரத்தில் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related

தங்கள் தலைவரை கவிழ்க்க சதித்திட்டம் போட்ட ஐ.எஸ் படையினர்: முறியடித்த உளவுத்துறை

ஐ.எஸ் தீவிரவாத இயக்க தலைவர் அபு அல்-பாக்தாதியை கவிழ்க்க திட்டம் தீட்டிய 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் பல பகுதிகளை கைப்பற்றி தனிநாடு அமைத்துள்ளது...

காதலனிடம் தவறான உறவு வைத்திருந்த பெண்: முகத்தில் ஒரு குத்துவிட்டு, முடியை அறுத்த காதலி (வீடியோ இணைப்பு)

கொலம்பியாவில் தனது காதலனிடம் தவறான தொடர்பு வைத்திருந்த பெண்ணுக்கு காதலி வழங்கிய தண்டனைக் காட்சி இணையதளத்தில் வீடியோவாக வெளியாக தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கொலம்பியாவை சேர்ந்த பெண்மணி ஒ...

சீனாவைத் தாக்கிய 6.4 ரிக்டர் நிலநடுக்கத்தில் 3 பேர் பலி

சீனாவின் ஜின்ஷியாங் மாகாணத்தின் குவாகவுண்டி அருகே காலை 9 மணியளவில் 6.3 ரிக்டர் அளவுடைய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று தாக்கியுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையமான USGS தெரிவித்துள்ளது.விவசாயம் ...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item