தங்கள் தலைவரை கவிழ்க்க சதித்திட்டம் போட்ட ஐ.எஸ் படையினர்: முறியடித்த உளவுத்துறை
ஐ.எஸ் தீவிரவாத இயக்க தலைவர் அபு அல்-பாக்தாதியை கவிழ்க்க திட்டம் தீட்டிய 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ...
http://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_77.html

ஐ.எஸ் தீவிரவாத இயக்க தலைவர் அபு அல்-பாக்தாதியை கவிழ்க்க திட்டம் தீட்டிய 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் பல பகுதிகளை கைப்பற்றி தனிநாடு அமைத்துள்ளது.
அதன் தலைவராக இருந்து வரும் அபு அல்–பக்தாதி, அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகள் நடத்திய குண்டு வீச்சில் படுகாயம் அடைந்தார்.
தற்போது, இந்த காயம் காரணமாக தீவிர சிகிச்சை பெற்று வரும் அவரை கவிழ்க்க ஐ.எஸ் படையினரே சதித்திட்டம் தீட்டியதை அவ்வியக்கத்தின் உளவுத்துறை முறியடித்தது.
மேலும், சதித்திட்டத்தில் ஈடுபட்டதாக ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த 13 பேர் கைது செய்யப்பட்டனர், அதை தொடர்ந்து அவர்கள் அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்ட வர்களில் 5 பேர் ஐ.எஸ்.தீவிரவாத இயக்க ராணுவ கமாண்டர்கள் என தெரிய வந்துள்ளது. மற்றவர்கள் தலைவர்கள் ஆவர்.
இந்த தகவலை பிரித்தானியாவில் இருந்து வெளியாகும் அரேபிய பத்திரிகை செய்தியாக வெளியிட்டுள்ளது.


Sri Lanka Rupee Exchange Rate