அதிர்ச்சியில் அரசியல் தலைவர்கள்!
கரணம் தப்பினால் மரணம் எனும் நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவில் ஜனாதிபதியான மைத்ரிபால சிறிசேன சற்றும் ...

http://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_41.html

இது தொடர்பாக கடந்த இரண்டு மணி நேரங்களாக எமது செய்திக் குழுவினர் தொடர்பு கொண்ட ஏறத்தாழ அனைத்து அரசியல் தலைவர்களும் இது பற்றித் தங்களுக்கு எதுவும் தெரியாது எனவும் மைத்ரிபால வாய் திறக்காமல் முழுமையான விடயத்தை அறிந்து கொள்ள முடியாதுள்ளதாகவும் குறிப்பிடுவதோடு இச்சூழ்நிலை சற்றும் எதிர்பார்க்காதது எனவும் தெரிவிக்கின்றனர். எனினும், மஹிந்த ராஜபக்ச சாதாரண வேட்பாளராகவே அனுமதிக்கப்பட்டுள்ளார் என அமைச்சர் ராஜித சேனாரத்ன விளக்கமளித்திருப்பதையும் இலகுவான விடயமில்லை என சுட்டிக்காட்டியுள்ள பிரபல அரசியல் தலைமைகள் இதன் விளைவுகளைப் பற்றிய முழு விபரங்களை தற்போது அனுமானிக்க முடியாதெனவும் தெரிவித்துள்ளனர்.
ஹிருனிகா, ராஜித, அர்ஜுன உட்பட சுக பிரபலங்கள் மஹிந்த வந்தால் வெளியியேறப்போவதாக முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.