சுவிஸ் மாணவர்களை அச்சுறுத்தும் நாகப்பாம்பு!

 சுவிட்சர்லாந்தின் பேசல் மண்டலத்திற்குட்பட்ட பாடசாலை அருகே நாகப்பாம்பு சுற்றி திரிவதால், மாணவர்கள் யாரும் வெளியே வர வேண்டாம்...









 சுவிட்சர்லாந்தின் பேசல் மண்டலத்திற்குட்பட்ட பாடசாலை அருகே நாகப்பாம்பு சுற்றி திரிவதால், மாணவர்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சுவிஸின் Pratteln நகரில் அமைந்துள்ள Rudolf Steiner என்ற பாடசாலைக்கு அருகே உள்ள வனப்பகுதியில் கடந்த சனிக்கிழமை நாகப்பாம்பு நபர் ஒருவரை தாக்கியுள்ளது.

 என்ற அந்த நபரின் கண்ணில் அந்த நாகப்பாம்பு உமிழ்ந்ததால், அவர் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பேசல் பொலிசாருக்கு இந்த தகவல் அளித்ததும், விலங்குகளை கட்டுப்படுத்தும் குழுவினருடன் வந்த பொலிசார் கடந்த சனிக்கிழமை முதல் பகுதி முழுவதும் நாகப்பாம்பை தேடி வருகின்றனர்.

வனப்பகுதிக்கு மிக அருகில் Rudolf Steiner பள்ளி உள்ளதால், மாணவர்கள் தகுந்த பாதுகாப்பு அல்லது பெற்றோர்களின் உதவி இல்லாமல் வெளியே வர வேண்டாம் என பாடசாலை வளாகத்தில் எச்சரிக்கை பதாகையை பொலிசார் வைத்துள்ளனர்.

இது குறித்து பாடசாலையின் முதல்வரான Andreas Günther கருத்து வெளியிடுகையில்,


கொடிய விஷமுடைய நாகப்பாம்பு இன்னும் பிடிபடாமல் இருப்பதால், அதை பற்றி மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளோம்.

மேலும், பாடசாலை முன்பக்கம் வழியாக தங்களின் பிள்ளைகளை எச்சரிக்கையுடன் அழைத்து வர வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்களுக்கு மின்னஞ்சல்கள் மூலம் தகவல்கள் அனுப்பியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் Spei, மருத்துவ விடுப்பில் உள்ளார் என்றும் அவரது கண் பார்வையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், நாகப்பாம்பு குறித்து தகவல் அறிபவர்கள் உடனடியாக பேசல் பொலிசாரை தொடர்பு கொள்ளுமாறும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related

உலகம் 6091009166081025117

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item