மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வெளியேறும் வெளிநாட்டவர்கள்
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிக்கும் வெளிநாட்டவர்களில் 50% பேர் அந்நாட்டைவிட்டு வெளியேறி வேறு நாடுகளில் குடியேற விரும்புவதாக சமூக ஆய்வ...
http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_0.html
![]() |
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிக்கும் வெளிநாட்டவர்களில் 50% பேர் அந்நாட்டைவிட்டு வெளியேறி வேறு நாடுகளில் குடியேற விரும்புவதாக சமூக ஆய்வு நிறுவனங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெளிநாட்டினருக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முன்னிலை வகிக்கிறது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மொத்த சனத்தொகையில் 20% பேர் வேலைவாய்ப்பிற்காக வெளிநாட்டிலிருந்து அங்கு சென்று குடியேறியவர்கள் தான்.
ஆனால், தற்போது இந்த நிலைமையில் மாற்றம் ஏற்படத் தொடங்கியுள்ளது.
எமிரேட்ஸில் பணிபுரியும் வெளிநாட்டவர்களில் 50% பேர் வேறு நாடுகளுக்கு இடம்பெயரும் ஆசையில் இருக்கின்றார்களாம்.
இதற்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் காணப்படும் வாழ்க்கைச் செலவீனம் தான் காரணம் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
வெளிநாட்டவர்கள் வெளியேறத் தொடங்கினால் எமிரேட்ஸின் எதிர்காலம் மிக மோசமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என சமூகவியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
|



Sri Lanka Rupee Exchange Rate