நைஜீரியாவில் 7 வயதுச் சிறுமி தற்கொலைத் தாக்குதல்?:7 பேர் பலி
வடகிழக்கு நைஜீரியாவிலுள்ள பொடிஸ்கும் என்ற நகரத்தில் அமைந்துள்ள சந்தை ஒன்றில் வருகை தந்த 7 வயது மதிக்கத் தக்க சிறுமி ஒருத்தி சோதனைச் சாவடி...


இஸ்லாமியத் தீவிரவாதக் குழுவான போக்கோ ஹராமை தனது அரசு குறைத்து மதிப்பிட்டு விட்டதாக நைஜீரிய அதிபர் குட்லுக் ஜொனாதன் அண்மையில் அபிப்பிராயம் தெரிவித்திருந்த நிலையில் நிகழ்த்தப் பட்ட இத்தாக்குதலின் பின்னணியிலும் போக்கோ ஹராம் இருக்கலாம் எனக் கருதப் படுகின்றது. இந்நிலையில் பொட்டிஸ்கும் நகரானது யோபே மாநிலத்தில் வர்த்தகத் தலைநகர் என்பதுடன் எதிர்வரும் மார்ச் 28 ஆம் ர்திகதி அங்கு அதிபர் தேர்தலும் பாராளுமன்றத் தேர்தலும் நடைபெறவுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை தான் பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் லௌரன்ட் ஃபாபியஸ் போக்கோ ஹராமுடன் போராட நைஜீரியா தனது முழு வீச்சையும் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியிருந்தார்.
இதைவிட இப்போரில் நைஜீரியாவுக்கு மட்டுமன்றித் தீவிரவாத அச்சுறுத்தல் உள்ள அதன் 3 அண்டை நாடுகளினதும் இராணுவத்துக்கும் புலனாய்வு மற்றும் ஏனைய விதத்திலான வழிநடத்துதலை இன்னமும் அதிகரிக்கப் போவதாகவும் பிரான்ஸ் அரசு வாக்குறுதி அளித்துள்ளது. சுமார் 6 வருடங்களாக நைஜீரியாவில் தீவிரமடைந்து வரும் போக்கோ ஹராம் இயக்கத்துக்கு எதிராக நாட்டைத் தயார்ப் படுத்துவதற்காக அங்கு பெப்ரவரி 14 இல் நடைபெறவிருந்த தேர்தல் மார்ச் 28 இற்குப் பின் தள்ளிப் போடப்பட்டுள்ளது. மேலும் 2011 முதல் அதிபராக இருந்து வரும் குட்லுக் ஜொனாதன் இத்தேர்தலில் முன்னால் இராணுவ அதிபரான மொஹம்மடு புஹாரியுடன் கடினமான போட்டியைச் சந்திப்பார் எனவும் எதிர்பார்க்கப் படுகின்றது