மைத்திரியை கொலை செய்ய சதி முயற்சி
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இம்மாதம் 4ஆம் திகதி சுதந்திர ...

http://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_216.html
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இம்மாதம் 4ஆம் திகதி சுதந்திர தின நிகழ்வில் அணி வகுப்பு மரியாதையின் போது மைத்திரியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து, அது குறித்து மைத்திரிக்கு முன்னரே தெரியப்படுத்தப்பட்டிருந்த நிலையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இதன் காரணமாக சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குண்டு துளைக்காத விசேட மேலாடையை அணிந்திருந்தாகக் கூறப்படுகிறது.