மஹிந்தவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த வலியுறுத்தி 10 இலட்சம் கையெழுத்து பெரும் வேட்டை ஆரம்பம்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரதமர் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை நிறுத்த வலியுறுத்தி, பிவித்துரு ஹெல உறுமய கட்சியின்...

Untitled
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரதமர் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை நிறுத்த வலியுறுத்தி, பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில மகஜர்  ஒன்றில் ஒரு மில்லியன் கையெழுத்துக்களை சேகரிக்க தீர்மானித்துள்ளார்.
கையெழுத்துக்களை பெற்று இந்த மகஜரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவிடம் கையளிக்க உள்ளதாக கம்மன்பில கூறியுள்ளார். மகிந்த ராஜபக்ச தேர்தலில் தோல்வியடைந்தாலும் இலங்கை மக்கள் இன்னும் அவரை நேசிக்கின்றனர் என்பதை நாம் முழு உலகத்திற்கும் எடுத்துக்காட்டியுள்ளோம்.
நுகேகொடையில் நடைபெற்ற மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான கூட்டத்தில் 5 லட்சம் மக்கள் கலந்து கொண்டனர். எனினும் அசாத் சாலி 5 ஆயிரம் மக்கள் மாத்திரமே அந்த கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்று கூறியிருந்ததுடன் அமைச்சர் ராஜித சேனாரத்ன 212 பஸ்களில் மக்கள் அழைத்து வரப்பட்டதாக குறிப்பிட்டிருந்தார் எனவும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் மனநிலைமையை அறிந்து கொள்ளவதில் அக்கறை செலுத்துவதை காணமுடியாதிருப்பதால், மக்களின் கையெழுத்துக்களை பெற்று எழுத்து மூலமான சாட்சியாக இந்த மகஜரில் கையெழுத்து பெற தீர்மானித்துள்ளோம். கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு எதிரில் இன்று பிற்பகல் 3 மணிக்கு மகஜரில் கையெழுத்து பெறும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் கம்மன்பில மேலும் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் கோரிக்கைகள் முன்வைக்கப்படாத நிலையில், பிற கட்சிகளை சேர்ந்த விமல் வீரவன்ஸ, உதய கம்மன்பில, தினேஷ் குணவர்தன, வாசுதேவ நாணயக்கார போன்றவர்கள் இந்த கோரிக்கை முன்வைத்து வருகின்றனர்.
அரசியல் ரீதியாக வங்குரோத்து நிலைமைக்கு சென்றுள்ள இவர்கள் மகிந்தவை பயன்படுத்தி அரசியல் கரைசேர முயற்சிப்பதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

Related

அதிகாலை 3 அல்லது 4 மணி அளவில் இலங்கையின் புதிய ஜனாதிபதி யார் என்று தெரியவரும்?

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் 2015 நேற்று (08) நடைபெற்றது. இதில் மஹிந்த ராஜபக்ஷ‌ மீண்டும் போட்டியிட்டார் இதில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக மைத்திரி பால சிறிசேனா போட்டியிட்டார். இரவு 7 மணிக்கு தபா...

காலி மாவட்டம் காலி தேர்தல்

காலி மாவட்டம் காலி தேர்தல் தொகுதிக்கான மொத்த முடிவுகள்:◄மைத்திரிபால சிரிசேன‌ - 39547 வாக்குகள்◄மஹிந்த ராஜபக்க்ஷ‌ - 23184 வாக்குகள்

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான தபால்மூல வாக்களிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான தபால்மூல வாக்களிப்பு முடிவுகள்:◄மைத்திரிபால 6816 வாக்குகள்◄மஹிந்த ராஜபக்க்ஷ ‍1605 வாக்குகள்

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item