64 பௌத்த அமைப்புக்களின் உடன்படிகை!!
எதிர்வரும் 17ஆம் திகதி சிங்கள தேசியத்தை கட்டியெழுப்ப சிங்கள மக்கள் அணிதிரள வேண்டும். இல்லையெனில் இலங்கை என்ற நாடு எமக்கு இல்ல...
http://kandyskynews.blogspot.com/2015/08/64.html
எதிர்வரும் 17ஆம் திகதி சிங்கள தேசியத்தை கட்டியெழுப்ப சிங்கள மக்கள் அணிதிரள வேண்டும். இல்லையெனில் இலங்கை என்ற நாடு எமக்கு இல்லாமல் போய்விடும் என்று சிங்கள பௌத்த பேரினவாத அமைப்புகள் தெரிவித்துள்ளன.
ஹலால் எதிர்ப்பு மோதல் மற்றும் அளுத்கம வன்முறைகள் தொடர்பாக விசாரித்து அச் சதித் திட்டத்தின் பின்னணியில் இருந்தோரை பகிரங்கப்படுத்த வேண்டுமென்றும் அவ்அமைப்புக்கள் வலியுறுத்தின.
கொழும்பு விஹாரமகாதேவி உள்ளக அரங்கில் நேற்று திங்கட் கிழமை இடம்பெற்ற 64 சிங்கள பௌத்த அமைப்புக்கள் இணைந்து 5 விடயங்களை வலியுறுத்தி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவிடம் கையெழுத்திட்டு கையளித்த “தேசிய உடன்பாடு” என்ற உடன்படிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய அமைப்புக்களின் ஒன்றியம் ஆசீர்வாத மாநாடு என்ற பெயரில் இதனை ஏற்பாடு செய்திருந்தது. தேசிய உடன்பாட்டு பிரகடனத்தை எதிர்கால பிரதமரிடம் கையளித்தல் என இந் நிகழ்வுக்கு பெயரிடப்பட்டிருந்தது.
காலை 10.58 மணிக்கு 64 உள்நாட்டு, வெளிநாட்டு சிங்கள பௌத்த அமைப்புகள் சார்பில் இப்பிரகடனத்தில் கையெழுத்திட்டு மஹிந்த ராஜபக்ஷ விடம் கையளித்தன.
இவ் உடன்படிக்கையில் எல்லாவெல மேதானந்த தேரர், வெல்கமுவே நாலந்த தேரர் உட்பட பௌத்த குருமாரும், தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் டாக்டர் குணதாச அமரசேகர, பொதுச் செயலாளர் டாக்டர் வசந்த பண்டார உட்பட பலரும் கையெழுத்திட்டுள்ளனர்.
இந்நிகழ்வில் ஏராளமான பௌத்த குருமார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
முன்னாள் அமைச்சர்களான காமினி லொக்குகே, திஸ்ஸ அத்தநாயக்க, பந்துல குணவர்த்தன, குமார வெல்கம உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
ஐந்து விடயங்களை வலியுறுத்தி கையெழுத்திடப்பட்டு மஹிந்த ராஜபக் ஷ விடம் கையளிக்கப்பட்ட இவ் உடன் படிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
சர்வதேச உளவுப் பிரிவினரின் சதித்திட்டத்திற்கு அமைய புதிய ஈழத்திற்கான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
அதற்காக நாட்டுக்குள் அரபு வசந்தத்தை ஏற்படுத்தி இரத்தம் சிந்தாமல் தேர்தல் மூலம் மஹிந்த ராஜபக் ஷவை தோல்வி அடையச் செய்தனர். எனினும் பிரிவினைவாத பிரிவினைவாதத்திற்கு சார்பான ஆட்சி உருவாவதை தோல்வியடையச் செய்ய வேண்டும்.
சமஷ்டி முறையில் காணி, பொலிஸ் அதிகாரங்களை நடைமுறைப்படுத்தவும் வடக்கு – கிழக்கு இணைக்கவும் முயற்சிக்கும் வேளையில் மோதல்களை ஏற்படுத்தி மக்களை வீதியில் இறக்கி சர்வதேசத்தின் தலையீட்டை உருவாக்கி அதன் ஊடாக நாட்டை இரண்டாகப் பிரிக்கும் ஈழத் திட்டமும் முன்னெடுக்கப்படுகிறது.
அதற்கு மேலதிகமாக சர்வதேச அடிப்படைவாத மத, யுத்தக் குழுக்களை நாட்டுக்குள் ஊடுருவச் செய்து தேச எல்லைகள், மூலம் இனங்களிடையே மோதல்களை ஏற்படுத்தி நாட்டை சுடுகாடாக்கும் முயற்சி முன்னெடுக்கப்படவுள்ளது. இதனை தோல்வியடையச் செய்வோம்.
சர்வதேச யுத்தக் குற்றச்சாட்டு விசாரணைக்கு உள்ளக விசாரணை முத்திரைகுத்தி முன்னெடுக்கப்படவுள்ள முயற்சியை தோல்வியடையச் செய்வோம்.
19ஆவது திருத்தம் மீள் திருத்தம் செய்யப்பட வேண்டும். 13ஆவது திருத்தத்தில் பலாத்காரமாக ஏற்படுத்தப்பட்ட பிரிவினைவாத ஷரத்துக்களை நீக்க வேண்டும்.
மற்றும் ஹலால் விரோத மோதல் உட்பட
அளுத்கம வன்முறைகள் தொடர்பாக விசார ணைகளை நடத்தி அதன் பின்னணியிலுள்ள சதித்திட்டத்தினை பகிரங்கப்படுத்த வேண் டும். குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட்டு தேசிய ஒற்றுமை பாதுகாக்கப்பட வேண் டும்.