தேர்தல் பிர­சார கூட்­டங்­களில் குர்­ஆ­னையோ அல்­லது முஸ்லிம் சமூ­கத்­தையோ அவ­ம­திக்கும் வகை­யி­லான கருத்­துக்­களை வெளி­யி­டக்­கூ­டாது என!!

பொது­ப­ல­சேனா அமைப்பின் அர­சியல் கட்­சி­யான பொது­ஜன பெர­முன (பி.ஜே.பி.) யின் தேர்தல் பிர­சார கூட்­டங்­களில் குர்­ஆ­னையோ அல்­லது முஸ்லிம்...

பொது­ப­ல­சேனா அமைப்பின் அர­சியல் கட்­சி­யான பொது­ஜன பெர­முன (பி.ஜே.பி.) யின் தேர்தல் பிர­சார கூட்­டங்­களில் குர்­ஆ­னையோ அல்­லது முஸ்லிம் சமூ­கத்­தையோ அவ­ம­திக்கும் வகை­யி­லான கருத்­துக்­களை வெளி­யி­டக்­கூ­டாது என பொது­ப­ல­சேனா அமைப்பின் நிறை­வேற்றுப் பணிப்­பா­ளரும் பொது ஜன பெர­முன கட்­சியின் கம்­பஹா மாவட்ட வேட்­பா­ள­ரு­மான டிலந்த விதா­னகே கட்­சியின் அபேட்­ச­கர்­க­ளுக்கு அறி­வு­றுத்­தல்­களை வழங்­கி­யுள்ளார்.

 பொது­ஜன பெர­முன சார்பில் அனு­ரா­த­புரம் மாவட்­டத்தில் ‘நாக பாம்பு’ சின்­னத்தில் போட்­டி­யிடும் சுசந்த ரண்­முத்து குமா­ர­சிங்க எனும் வேட்­பாளர் தேர்தல் பிர­சார கூட்­டத்தில் குர்­ஆ­னையும் முஸ்­லிம்­க­ளையும் அவ­ம­திக்கும் வகை­யி­லான கருத்­துக்­களை வெளி­யிட்­ட­தாக ஆர்.ஆர்.டி. அமைப்பு குற்றம் சுமத்தி தேர்தல் ஆணை­யா­ள­ரி­டமும் பொலிஸ் மா அதி­ப­ரி­டமும் முறைப்­பாடு செய்­த­தை­ய­டுத்தே டிலந்த விதா­னகே மேற்­கு­றிப்­பிட்ட அறி­வு­றுத்­தல்­களை வழங்­கி­யுள்ளார்.

இது தொடர்­பாக டிலந்த விதா­னகே ‘விடி­வெள்ளி” க்கு கருத்து தெரி­விக்­கையில்;
‘ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் ஜன­நா­யக  நாட்டில் கருத்துச் சுதந்­திரம் இருந்­தாலும் ஒரு கட்சி என்ற ரீதியில் கட்­சியின் ஒழுக்க விதி­க­ளுக்கும் கட்­டுப்­பா­டு­க­ளுக்கும் உறுப்­பி­னர்கள் கட்­டுப்­பட வேண்டும்.

தேர்தல் பிர­சாரக் கூட்­டத்தில் எமது கட்­சியின் அபேட்­ச­க­ரொ­ருவர் குர்­ஆனை அவ­ம­திக்கும் வகையில் கருத்து வெளி­யிட்­ட­தாக எனக்கும் முறைப்­பாடு கிடைத்­தது.

இதனை நான் கண்­டிக்­கிறேன். தேர்தல் பிர­சா­ரங்­க­ளின்­போது இன­வாத கருத்­துக்கள் வெளி­யி­டப்­ப­டக்­கூ­டாது. இவ்­வா­றான கருத்­துக்கள் வெளி­யி­டு­வ­தி­லி­ருந்து தவிர்ந்து கொள்­ளும்­படி சம்­பந்­தப்­பட்ட அபேட்­ச­க­ரையும் ஏனைய அபேட்­ச­கர்­க­ளையும் வேண்­டி­யுள்ளேன் என்றார்.

குர்­ஆனை அவ­ம­திக்கும் வகை­யி­லான கருத்­துக்­களை தேர்தல் பிர­சார கூட்­டங்­களில் பொது­ஜன பெர­முன வேட்­பாளர் வெளி­யிட்­ட­தாக ஆர்.ஆர்.டி. அமைப்பின் உறுப்­பி­னர்­க­ளான ஏ.ஆர்.எம். சபீன் மற்றும் காதர் மொஹிதீன் ஆகியோர் தேர்தல் ஆணை­யா­ள­ரி­டமும் பொலிஸ் மா அதி­ப­ரி­டமும் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை முறைப்­பாடு செய்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

குறிப்பிட்ட முறைப்பாடு தொடர்பாக தேர்தல் ஆணையாளரோ அல்லது பொலிஸ் மா அதிபரோ கடந்த திங்கட்கிழமை வரை தமது கட்சியை விசாரணைக்காக  தொடர்பு கொள்ளவில்லையெனவும் விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பு  வழங்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

Related

இலங்கை 3918969282957367997

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item