மஹிந்த எந்தக் கதவால் மீண்டும் அரசியலுக்குல் நுழைவார் ?
ஜனசெத முன்னனியின் தலைமைத்துவத்தை பொருப்பேற்குமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு அந்த முன்னணியின் தலைவர் பத்ரமுல்லே சீலரத்ன தேரர்...

http://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_558.html

ஜனசெத முன்னனியின் தலைமைத்துவத்தை பொருப்பேற்குமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு அந்த முன்னணியின் தலைவர் பத்ரமுல்லே சீலரத்ன தேரர் அழைப்பு விடுத்துள்ளார்.
தனது ஜனசெத தலைமைத்துவத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு வழங்கத் தயார் எனவும், மீண்டும் ஒரு கட்சியை அமைக்க வேண்டாம் எனவும் பத்ரமுல்லே சீலரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை எதிர்கட்சி உறுப்பினர்கள் குழுவொன்று விரைவில் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுமாறு அழைப்பு விடுக்கும் என முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
´மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் தேர்தலில் போட்டியிட வைக்க முடிந்தளவு முயற்சி செய்வோம். மஹிந்தவை விரும்பும் மக்கள் பெருமளவில் உள்ளனர். அதனால் அவர் வெற்றிபெற வாய்ப்பு உண்டு´ என வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்தவை ஆதரித்து நுகேகொடயில் நடைபெற்ற கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ விசேட செய்தி ஒன்றை அனுப்பி அந்த கூட்டத்தில் உள்ளவர்களின் கரங்களை பற்றிப் பிடித்துக் கொள்வதாகவும் மக்களின் விருப்பத்திற்கு மாறாக செயற்பட தயாரில்லை என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது