ஜயசூரியவை பின்னுக்கு தள்ளிய சங்கா

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரும் சாதனை நாயகனுமான குமார் சங்கக்கார இன்று புதிய மைல்கல் ஒன்றை எட்டினார். சர்வதேச ஒரு நா...

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரும் சாதனை நாயகனுமான குமார் சங்கக்கார இன்று புதிய மைல்கல் ஒன்றை எட்டினார்.

சர்வதேச ஒரு நாள் அரங்கில் அதி கூடுதலாக ஓட்டங்களை பெற்றவர்கள் தரவரிசையில் இலங்கை அணியின் முன்னாள் வீரர் சனத் ஜயசூரியவை பின்னுக்குத் தள்ளி மூன்றாவது இடத்தை கைப்பற்றி குமார் சங்கக்கார சாதனை படைத்துள்ளார் .

நியூசிலாந்துக்கு எதிரான இன்றைய நான்காவது ஒருநாள் போட்டியில் 76 ஓட்டங்களை பெற்றதன் மூலமே இந்த இலக்கை அடைந்துள்ளார்.

சர்வதேச ஒருநாள் அரங்கில் 394 போட்டிகளில் விளையாடியுள்ள குமார் சங்கக்கார, 20 சதங்கள் 92 அரைச் சதங்கள் அடங்கலாக 13490 ஓட்டங்களை பெற்றுள்ளார். மேலும் 40.63 சராசரியையும் கொண்டுள்ளார்.

சர்வதேச ஒருநாள் அரங்கில் 18426 ஓட்டங்களுடன் முதலிடத்தில் சச்சின் டெண்டுல்கரும், ரிக்கி பொன்டிங் 13704 ஓட்டங்களுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர். சனத் ஜயசூரிய 13430 ஓட்டங்களுடன் நான்காம் இடத்திலும் மஹேல ஜயவர்தன 12 472 ஓட்டங்களுடன் ஐந்தாம் இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் போர்வெற்றி விழா! பிரபா கணேசனும் பங்கேற்கிறார்!

போர் வெற்றி நிகழ்வு இந்த முறையும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் கொண்டாடப்படவுள்ளதாக முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் இந்த நிகழ்...

ஜனாதிபதி தலைமையில் தேசிய எரிசக்தி பாதுகாப்பு மாதத்தின் உத்தியோகப்பூர்வ நிகழ்வு

தேசிய எரிசக்தி பாதுகாப்பு மாதத்தின் உத்தியோகப்பூர்வ நிகழ்வு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் சுதந்திர சதுக்கத்தில் இன்று நடைபெற்றது எதிர்காலத்திற்காக நாடு என்ற தொனிப்பொளின் கீழ் எரிசக்தி பாத...

அனைத்து வர்த்தக நிலையங்களிலும் இலவச WiFi வசதியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை

நாட்டிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களிலும் இலவசமாக WiFi வசதியை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப தொடர்பாடல் முகவர் நிலையம் தெரிவித்துள்ளது. இதன் முதற்க...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item