(வீடியோ இணைப்பு) பொதுபலசேன தேரர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யுமாறு பொலிசாருக்கு நீதவான் உத்தரவு.
அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைத்தொழில் வர்த்தக அமைச்சிற்குள் பொதுபலசேனா அமைப்பின் உறுப்பினர்களான பௌத்த தேரர்கள் சிலர் கடந்த வருடம் அத்துமீறி...


அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைத்தொழில் வர்த்தக அமைச்சிற்குள் பொதுபலசேனா அமைப்பின் உறுப்பினர்களான பௌத்த தேரர்கள் சிலர் கடந்த வருடம் அத்துமீறி நுழைந்தமை தொடர்பாக இன்று இடம்பெற்ற வழக்கு விசாரணைகளில்,
சந்தேகநபர்களான பொதுபலசேனா அமைப்பின் உறுப்பினர்களுக்கு எதிரான விசாரணையினை துரிதப்படுத்துமாறும் குற்றப் பத்திரிகையினை தாக்கல் செய்யுமாறு கொம்பனித் தெரு பொலிஸாருக்கு கோட்டை நீதவான் உத்தரவிட்டார்.
இதனையடுத்து இந்த வழக்கு விசாரணைகள் பெப்ரவரி 26ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆர்.ஆர்.டி அமைப்பின் ஏற்பாட்டாளரான சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் தலைமையில் மைத்ரி குணரத்ன, சரத் சிறிவர்த்தன ஆகியோர் அமைச்சு சார்பாக இந்த வழக்கில் ஆஜராகினர்.
இந்த வழக்கு விசாரணைகளின் போது கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீனினும் நீதிமன்றில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தகவல்: வீடியோ – சட்டத்தரணி சிராஸ் நூர்தீன்
செய்தியாக்கம் :விடியல்
[youtube https://www.youtube.com/watch?v=UCmOx__RhBA]