குற்றவாளிகளுக்கு அரசியல் கட்சிகள் வேட்பு மனு வழங்க வேண்டாம்!- அஸ்கிரி, மல்வத்து பீடாதிபதிகள்
குற்றச் செயல்கள், ஊழல் மோசடிகளில் ஈடுபடாதவர்களுக்கு மட்டும் அரசியல் கட்சிகள் வேட்பு மனுக்களை வழங்க வேண்டுமென கண்டி அஸ்கிரி மற்றும் மல்வத்து ...

எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது நேர்மையான நாட்டுக்கு சேவையாற்றக் கூடியவர்களுக்கு மட்டும் தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் அளிக்குமாறு அரசியல் கட்சிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேர்தலில் போட்டியிடும அரசியல் கட்சித் தலைவர்களிடம் இரண்டு பீடாதிபதிகளும் கோரியுள்ளனர்.
குற்றச் செயல்கள் மற்றும் ஊழல் மோசடிகளில் ஈடுபடும் வேட்பாளர்களை மக்கள் நிராகரிக்க வேண்டுமெனவும் அஸ்கிரி மற்றும் மல்வத்து பீடாதிபதிகள் மக்களிடம் கோரியுள்ளனர்.
