குழந்தையைக் கத்தியால் குத்திய தாய்!!
நேற்று ஞாயிற்றுக்கிழமை(12), Talence (Gironde) இல் 39 வயதுடைய தாய் ஒருவர் தனது நான்கு வயதுப் பிள்ளையைக் கத்தியால் குத்தியுள்ளார். பிள்ளையின...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_988.html
பிராந்தியப் பாதுகாப்புக் காவற்துறையினரின் மாவட்டக் குடும்பப் பாதுகாப்புப் பிரிவான BDPF (brigade départementale de protection de la famille) இந்த விசாரணையை ஆரம்பித்துள்ளது. எப்படி இந்தத் தாய் தனது குழந்தையையே கத்தியால் குத்தியிருக்க முடியும் என்பதே முதற்கட்டக் கேள்வியாக உள்ளது.
முதற்கட்டத் தகவலின்படி, குழந்தையின் தந்தையே காவற்துறையினரையும் அவசரமுதலுதவிப் படையினரையும் அழைத்துள்ளார். கொலைமுயற்சியில் ஈடுபட்ட தாய், பிராந்திய பொதுச் சேவையில் பணியாற்றுபவர். இவர் கடந்த காலங்களில் சில மன அழுத்தங்களிற்காகச் சிகிச்சை பெற்றுவந்துள்ளாதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தை மிகவும் அபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், கொலை முயற்சியில் ஈடுபட்ட தாய் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிற்கு முதலில் உளவியற் சிகிச்சைகளும் உளவியல் விசாரணைகளுமே நடாத்தப்படுகின்றது.