எனது பில்லியன் கணக்கான சொத்துக்களை சுருட்டியது ராஜபக்ச கும்பல்! - லலித் கொத்தலாவல குற்றச்சாட்டு
ராஜபக்ஷவினர் தன்னை சிறையில் தள்ளி விட்டு தனக்கு சொந்தமான சொத்துக்களை கொள்ளையிட்டதாக செலிங்கோ கூட்டு நிறுவனத்தின் தலைவர் லலித் கொத்தலாவல தெர...

நான் திருடன் அல்ல. கோல்டன் கீ நிதி பலம் இருந்தது. செலிங்கோ கூட்டு நிறுவனத்திடம் 13 பில்லியன் இருந்தது. இவை முதலீட்டாளர்களின் பணம். மூன்று வருடங்களில் 13 மில்லியன் பணத்தை திருப்பி கொடுக்கும் யோசனை ஒன்றை நாங்கள் நீதிமன்றத்தில் முன்வைத்தோம்.அவற்றை நாங்கள் கொடுக்க ஆரம்பித்தோம். 200 மில்லியன் ரூபா காசோலையை நாங்கள் நீதிமன்றத்திற்கு கொண்டு வந்தோம்.
இந்த விடயத்தில் எங்களிடமோ, முதலீட்டாளர்களிடம் தவறுகள் இருக்கவில்லை. முன்னாள் ஜனாதிபதியின் கும்பலுக்கு எங்கள் சொத்து மீது கண் இருந்தது. எங்களுக்கு சொந்தமான பில்லியன் கணக்கான சொத்துக்களை அநீதியாகவும் பேராசையிலும் கைப்பற்றி கொண்டனர். இதற்காகவே என்னை சிறையில் அடைத்தனர் எனவும் லலித் கொத்தலாவல தெரிவித்துள்ளார்.