ராஜித ஒரு பொய்யர்: மஹிந்த குற்றச்சாட்டு
அமைச்சர் ராஜித சேனாரத்ன போலியான பிரச்சாரங்களை செய்து வருகின்றார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாரஹேன்பிட்டியில்...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_959.html

அமைச்சர் ராஜித சேனாரத்ன போலியான பிரச்சாரங்களை செய்து வருகின்றார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாரஹேன்பிட்டியில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுடன் இடம்பெற்ற சந்திப்பையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தன்னிடம் 5 வாகனங்கள் மாத்திரமே காணப்படுகின்றன எனவும், அதற்கு மேலான வாகனங்கள் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு 6 வாகனங்களும், பாதுகாப்பிற்காக 213 பொலிஸ், இராணுவ வீரர்களும் வழங்கப்பட்டுள்ளதாக அண்மையில் அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அத்துடன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவிற்கு நீதிமன்ற உத்தரவிற்கமைய குறைந்தளவிலான வாகனங்களும், பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முன்னாள் ஜனாதிபதிகளில் சந்திரிக்காவுக்கு மாத்திரமே நீதிமன்றம் இவ்வாறான உத்தரவினை பிறப்பித்திருந்தது என குறிப்பிட்டுள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate