நாம் குற்றமற்றவர்கள்! நாம் பிழை செய்யவில்லை!– நாமல் ராஜபக்ச
நாம் பிழை செய்யவில்லை, நாம் குற்றமற்றவர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாமல் ராஜபக்ச நேற்று குற்றப் புலனாய்...
http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_251.html

நாமல் ராஜபக்ச நேற்று குற்றப் புலனாய்வு பிரிவின் விசாரணைகளில் பங்கேற்று திரும்பிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்ற விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாம் அரசியலில் ஈடுபட்டு வருகின்றோம், வேறு எந்தக் குற்றத்தையும் செய்யவில்லை.
குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமன்றி, பிரதேச அரசியல்வாதிகள் மீதும் குற்றம் சுமத்தப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
நாமல் ராஜபக்சவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நான்கரை மணித்தியாலங்கள் விசாரணை நடத்தியுள்ளனர்.
நேற்றைய தினம் காலை நாமல் ராஜபக்ஸ காவல்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவு முன்னிலையல் ஆஜராகியிருந்தார்.
காலை 9 மணி முதல் பிற்பகல் 1.45 மணி வரையில் அதிகாரிகள் விசாரணை செய்துள்ளனர்.
விசாரணைகள் தொடர்பில் பூரண ஒத்துழைப்பை தாம் வழங்க உள்ளதாக நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அண்மையில் அம்பாந்தோட்டை அங்குனுகொல பெலஸ்ஸவில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூட்டமொன்றின் போது, நாமல் ராஜபக்சவின் மெய்ப்பாதுகாவலர் ஒருவர் கைத்துப்பாக்கி ஒன்றுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அருகாமைக்கு சென்ற சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இராணுவ கோப்ரல் ஒருவரே இவ்வாறு கைத்துப்பாக்கியுடன் ஜனாதிபதிக்கு மிக அருகாமையில் சென்றார் என தெரிவிக்கப்படுகிறது.
தமது மெய்ப்பாதுகாவலர் தண்ணீர் போத்தல் ஒன்றை எடுத்துச் சென்றதாகவும் துப்பாக்கி வைத்திருக்கவில்லை எனவும் முன்னதாக நாமல் ராஜபக்ச ஊடகங்களுக்கு அறிவித்திருந்தார்.
எனினும் குறித்த மெய்ப்பாதுகாவலரிடம் நடத்திய விசாரணைகளின் அவர் கைத்துப்பாக்கி வைத்திருந்தமை அம்பலமாகியுள்ளது.


Sri Lanka Rupee Exchange Rate