கனடாவின் புதிய குடிவரவு சட்டம்! 140,000 இலங்கையர்களை பாதிக்கலாம்

கனடாவில் வசிக்கும் 140,000 இலங்கைப் பிரஜைகள், தமது பிரஜாவுரிமையை இழந்து இலங்கை திரும்ப வேண்டிய நிலையை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டு...

கனடாவில் வசிக்கும் 140,000 இலங்கைப் பிரஜைகள், தமது பிரஜாவுரிமையை இழந்து இலங்கை திரும்ப வேண்டிய நிலையை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெ நேசன் பத்திரிகை இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

கனேடிய அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய குடிவரவு சட்டத்தின்கீழ் இரண்டாம் நிலை பிரஜைகளான இவர்கள் பாதிக்கப்படலாம் என்று பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. இந்த சட்டம் கடந்த வாரத்தில் நடைமுறைக்கு வந்தது.

இதன்படி புதிதாக கனேடிய பிரஜாவுரிமையை பெற்றவர்கள், கனடாவில் பிறந்தவர்களை காட்டிலும் குறைந்த உரிமைகளை கொண்டிருக்கின்றனர்.

இந்த சட்டம் ஒரு புறக்கணிப்பு நடவடிக்கை என்று குற்றம் சுமத்தப்பட்ட போதும் அதனை மறுத்துள்ள கனேடிய அரசாங்கம், கனேடியர்களை பாதுகாப்பதற்காக இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

பயங்கரவாதத்தில் இருந்து கனடாவை பாதுகாப்பதே புதிய சட்டத்தின் நோக்கம் என்று கனடாவின் குடிவரத்துறை அமைச்சர் கிரிஸ் அலெக்சாண்டர் தெரிவித்துள்ளார்.

Related

தலைப்பு செய்தி 5791768371465730925

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item