அரசியல் கைதிகளின் விடுதலைக்கு ஜோன் கெரியின் அறிவுரையே காரணம்? கருத்துக்கூற தூதரகம் மறுப்பு

அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரியின் அறிவுரைக்கு அமையவே சிறிசேன- ரணில் அரசாங்கம் அரசியல் கைதிகளை விடுவிப்பதாக வெளியான தகவல் குறித்து அம...


அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரியின் அறிவுரைக்கு அமையவே சிறிசேன- ரணில் அரசாங்கம் அரசியல் கைதிகளை விடுவிப்பதாக வெளியான தகவல் குறித்து அமரிக்க தூதரகம் கருத்துக்கூற மறுத்துள்ளது.
இலங்கையின் ஆங்கில ஊடகம் ஒன்று இதனை தெரிவித்துள்ளது.

நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச கைதிகள் விரைவில் விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் ஜோன் கெரி இலங்கைக்கு வந்திருந்தபோது அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கையை மே 2ஆம் திகதி விடுத்திருந்தமையை ஆங்கில ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஏற்கனவே குற்றம் சுமத்தப்படாத ஜெயக்குமாரி உட்பட்ட 8பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

45பேர் நீதிமன்ற உத்தரவின்பேரில் புனர்வாழ்வு பயிற்சிகளுக்கு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று நிதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச ஆங்கில ஊடகத்துக்கு தெரிவித்துள்ளார்.

அத்துடன் 85பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்படவுள்ளன. 134 பேரின் வழக்குகள் விசாரணைகளுக்காக எஞ்சியுள்ளன.

55பேர் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Related

தலைப்பு செய்தி 2271656390777851972

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item