புதிய அரசாங்கத்தின் வேலைத்திட்டம் விடுதலைப் புலிகளை மீண்டும் எழுச்சி பெறச்செய்யும்: மஹிந்த
எதிர்வரும் பொதுத்தேர்தலில் பிரதம மந்திரி வேட்பாளராக போட்டியிடக்கோரும் மக்கள் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெ...
http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_571.html
எதிர்வரும் பொதுத்தேர்தலில் பிரதம மந்திரி வேட்பாளராக போட்டியிடக்கோரும் மக்கள் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மாத்தறையில் நேற்று மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான கூட்டம் இடம்பெற்றது. இதன்போது மஹிந்த ராஜபக்ச, பேரணியில் பங்கேற்றபோதும் மேடையில் ஏறவில்லை.
இந்தநிலையில் அவரின் உரை மேடையில் முன்னாள் அமைச்சர் டளஸ் அழகப்பெருமவினால் வாசிக்கப்பட்டது. அதில், அடுத்த கூட்டத்தில் தாம் பங்கேற்ககப் போவதாக மஹிந்த குறிப்பிட்டிருந்தார்.
2009ஆம் ஆண்டு பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டபோதும் தற்போதைய அரசாங்கம் அதனை மீண்டும் ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் ஒருக்கட்டமாக யாழ்ப்பாணத்தில் இருந்த 159 இராணுவ முகாம்களில் 59 முகாம்கள் அகற்றப்பட்டுள்ளன.
அத்துடன் சிறையில் உள்ள விடுதலைப்புலிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர்.
இந்தநிலையில் அரசாங்கத்தின் ஈழம்சார்ந்த வேலைதிட்டம், நாட்டை பாரிய அச்சத்துக்கு கொண்டு செல்லும் என்றும் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாத ஒழிப்புக்கு சீனா பாரிய உதவிகளை வழங்கியது. எனினும் தற்போதைய அரசாங்கம், சீன முதலீட்டு திட்டங்களை நிறுத்தியுள்ளது.
இந்தநிலையில் விடுதலைப்புலிகள் மீண்டும் எழுச்சி பெறுவதை மக்களுடன் சேர்ந்து தாம் தடுக்கப்போவதாக மஹிந்த ராஜபக்ச தமது செய்தியில் தெரிவித்திருந்தார்.