பிரதியமைச்சர் அமீர் அலி தனது அமைச்சுப் பொறுப்புக்களை பதவியேற்பு
வீடமைப்பு சமுர்த்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி அவர்கள் நேற்று செத்சிரிபாயவில் உள்ள வீடமைப்பு அமைச்சில் தமது பதவியை பொறுப்பேற...

http://kandyskynews.blogspot.com/2015/01/blog-post_248.html
வீடமைப்பு சமுர்த்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி அவர்கள் நேற்று செத்சிரிபாயவில் உள்ள வீடமைப்பு அமைச்சில் தமது பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார். இந் நிகழ்வில் அமைச்சர் றிசாத்பதியுத்தீனும் கலந்து கொண்டார்.
இங்கு கருத்து தெரிவித்த பிரதியமைச்சர் அமீர் அலி –
எனக்கு பிரதியமைச்சர் பதவியை வழங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மற்றும் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க, அகில் இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுத்தீன் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
இந்த அமைச்சின் அமைச்சராக விளங்கும் சஜித் பிரேமதாச அவர்களின் கீழ் கடமையாற்றக் கிடைத்தமையிட்டு நான் சிறந்த பாக்கியம் எனக் கருதுகின்றேன். 100 நாற்களுக்குள் அமைச்சருடன் இணைந்து அவரது வீடமைப்பு மற்றும் சமுர்ததித் திட்டங்களின் வேலைகளில் பங்கெடுத்து செயலாற்ற வேண்டியுள்ளது.
எனது 10 வருட கால பாராளுமன்றத்தில் அமைச்சர் சஜீத் பிரேமதாச இந்த வீடமைப்பு அமைச்சு பற்றி அடிக்கடி கேள்விகளை தொடுத்து அதனுக்கு கிடைக்கும் பதிலிலிருந்து மீள அக் கேள்விகளை தொடுத்து அதற்கு அமைச்சர் எடுத்த நடவடிக்கை என கேள்வி எழுப்புவார். அவரது தந்தையான ரணசிங்க பிரேமதாசாவின் வீடமைப்புத்;திட்டங்ககளை மீள முன்னெடுத்து இந்த நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு ஒரு பாரிய சேவையாற்றுவார்.
அவருடன் இணைந்து தானும் அர்ப்பணிப்பதாகவும் பிரதியமைச்சர் தெரவித்தார்.
தற்போதைய ஜனாதிபதியின் வெற்றிக்காக எமது கட்சித் தலைவர் றிசாத் பதியுத்தீன் எடுத்த அதிரடி முடிபுக்கு அமைய எமது கட்சியின் ஆதரவாளர்களை தெளிவுபடுத்தி மைத்திரியின் வெற்றிக்கு எமது கட்சி பாரிய பங்களிப்புச் செய்யுதுள்ளது.
அமைச்சர் றிசாத் பதியுத்தீன் இங்கு உரையாற்றுகையில் -
எமது கட்சிக்கு மற்றுமொரு சக்திமிக்க பலமாக இருந்தவர்தான் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ் அமீர் அலி என்னோடு இணைந்து இந்தக் கட்சியின் வளர்ச்சிக்கும் அதனை பரவலாக்கும் விடயத்தில் தன்னோடு தோள் நிற்பவர் அமீர் ;அலி அவர்கள். அமீர் அலி அவர்கள் சட்டத்தரணியாகவும், பாராமன்ற உறுப்பிணராகவும் முன்னாள் இராஜங்க அமைச்சராகவும் பணியாற்றியவர். அவர் இந்த அமைச்சரோடு இணைந்து சிறந்தமுறையில் பணியாற்ற கிடைத்தமையை ஒரு வரப்பிரதாசமாக நினைக்கின்றேன்.