மட்டகளப்பு அரசியல் வாதிகளின் ஊழல்கள் வெளிச்சத்துக்கு கொண்டுவரப்படும் – அமீர் அலி

தான் இந்த பிரதி அமைச்சுப் பதவியை பொறுப்பேற்றதற்கினங்க மாவட்டத்தில் அரசியல் பிரமுகர்களும் அரச அலுவலர்களும் நீண்ட காலமாக செய்து கொண்டிருக்கும்...


ameer11.jpg2_1.jpg3_1தான் இந்த பிரதி அமைச்சுப் பதவியை பொறுப்பேற்றதற்கினங்க மாவட்டத்தில் அரசியல் பிரமுகர்களும் அரச அலுவலர்களும் நீண்ட காலமாக செய்து கொண்டிருக்கும் ஊழல்களை சட்டத்துக்கு முன் கொண்டு வந்து அனைத்தையும் உடைத்தெரிவதே எனது நூறு நாள் வேலைத்திட்டத்தில் முதற்திட்டமாக இருக்கும் என எம்.எஸ்.எஸ்.அமீர் அலி நேற்று(23.01.2015) செத்சிரிபாயாவில் உள்ள சமூர்த்தி வீடமைப்பு பிரதி அமைச்சில் தனது கடமையை பொறுப்பேற்றதற்கு பிற்பாடு அஹமட் இர்சாட்டின் கேள்விக்கு மேற்கண்டவாறு பதிலளித்தார்.

அமீர் அலி பிரதி அமைச்சுப் பதவியை பொறுப்பேற்கும் இந் நிகழ்வில் வர்த்தக வாணிபதுறை அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்ரசின் தலைவருமான றிசாட் பதுர்டீன், செயலாளர் வை.எல்.எஸ்.ஹமீட், கிழக்கு மாகான சபை உறுப்பினர்களான எம்.எஸ்.சுபைர், சிப்லி பாறூக்,முன்னால் பிரதி அமைச்சர் ஹுசைன் பைலா, பிரதேச சபை உறுப்பினர்கள், கல்குடா பிரதேசத்தின் அரசியல் பிரமுகர்கள், முக்கியஸ்தர்கள், அமைச்சின் உயரதிகாரிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டதினை காணக்கூடியதாக இருந்தது.

மேலும் அங்கு தொடுக்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த பிரதி அமைச்சர் அமீர் அலி….. கல்குடா பிரதேசம் உட்பட முழு மட்டகளப்பு மாவட்ட மக்களின் கஸ்டநஸ்டங்களில் பங்கு கொள்ளும் அரசியல்வாதியாக இருக்க விரும்புவதோடு விசேடமாக கல்குடா பிரதேசத்தில் பாரிய பிரச்சனையாக இருந்து வருகின்ற தூய குடிநீர் பிரச்சனை மற்றும் பிரதேச சபை இரீதியாக எடுக்க இருக்கின்ற பிரச்சனைகள் என்பவற்றை எதிர்காலத்தில் பேச்சுவார்த்தைகளின் மூலம் முடிவுக்கு கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கையுடன் இருப்பதோடு, கடந்த காலங்களில் இந்த பிரச்சனைகளுக்கு தன்னால் முடியுமான முயற்ச்சிகள் மேற் கொள்ளப்பட்டிருந்தாலும் சில தடங்கள் ஏற்பட்டதன் காரனமாக எனது முயற்ச்சிகள் இடைநிறுத்தப்பட்டதினால் மாவட்டத்தில் இறுக்கின்ற தமிழரசுக்கட்ச்சியின் இனக்கப்பாட்டுடன் இந்த முயற்ச்சியினை மேற்கொள்வது என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

கடந்த காலங்களின் தனிப்பட்டு நிறைவேற்ற வேண்டும் என நினைத்த விடயங்களை தற்போது ஏனைய அரசியல் கட்ச்சிகளின் இனக்கப்பாட்டுடன் நிறைவேற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே தான் இருப்பதாக தெரிவித்தார். ஏன் என்றால் இந்த அரசாங்கம் ஒரு நல்லாட்ச்சியினை மையப்படுத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் அரசாங்கமாக இருப்பதினால் தானும் குறிப்பிட்ட பிரதேசத்தில் அரசியலும் நல்லாட்ச்சிப் படுத்தப்பட வேண்டும் என்ற முடிவில் இருப்பதாக தெரிவித்தார். மேலும் மாவட்டத்தில் இடம்பெறுக்கின்ற அபிவிருத்திகள், உரிமை சாந்த விடயங்கள் என்பவறை முன்னெடுக்கின்ற பொழுது அப்பிரதேசத்தில் இருக்கின்ற தமிழரசுக் கட்ச்சியின் பாரளுமன்ற உறுப்பினர்களோடும்,மாகான சபை உறுப்பினர்களோடும் கலந்தாலோசித்து நல்லதொரு முடிவுக்கு வருவதனையே எதிர்காலத்தில் முன்னிலைபடுத்த இருப்பதாக தெரிவித்தார்.

தமிழர்கள் முஸ்லிம்கள் என்று பிரிந்து செயல்படும் அரசியல் கலாச்சாரத்தை தான் வெறுப்பதாகவும், தனது மிகுதி அரசியல் வாழ்க்கை ஒற்றுமைப் படுத்தப்பட்ட அரசியல் கலாசாரத்தைக் கொண்டதான அரசியல் முன்னெடுப்புக்களை விசேடமாக மட்டகளப்பு மாவட்டத்தில் முன்னெடுக்க உள்ளதாக தெரிவித்ததோடு, அந்த அடிப்படையில் மட்டகளப்பு மாவட்டத்தில் காத்தான்குடியில் முதன்முதலாக தன்னால் ஆரம்பித்து வைக்கப்பட்ட தூய குடிநீத்திட்டமானது இடை நிறுத்தப்பட்டாலும், மக்களுக்கான தூய நீரானது இந்த வருட இறுதிக்குள்தான் தமிழ் முஸ்லிம் பிரதேசங்களுக்கும், கல்குடா பிரதேசத்துக்கும் கிடைக்கக் கூடிய வாய்பிருப்பதாகவும், யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்த முடிவுதான் இறுதியாக இடம்பெறும் என தெரிவித்தார்.

இந்த தூய குடிநீர் விடயம் சம்பந்தமாகவும் ஏனைய அரசியல் விடயங்களையும் தான் பிரதிநித்துவப்படுத்தும் கல்குடா மக்களுக்கு கடந்த ஏழு வருடக்களாக கூறிக்கொண்டு வருவதாகவும், எதிர்நோக்கியுள்ள பாரளுமன்ற தேர்தலில் கல்குடாவில் யார் வேண்டுமானாலும் களமிறங்களாம். அது இந்த நாட்டின் ஜனநாயக உரிமையாகும். அந்த வகையில் கல்குடாவில் எந்த சாத்தானாக இருந்தாலும் சரி, ஜாம்பவானாக இருந்தாலும் சரி தேர்தல் கேட்க முடியும் என்றதோடு அதற்க்கு யாராலும் தடைவிதிக்க முடியாது எற கருத்தினை கூறிய பிரதி அமைச்சர், நாட்டில் முஸ்லிம்கள் இக்கட்டான நிலையில் வாழ்ந்து கொண்டிருந்த வேலையில் மஹிந்தவின் அரசாங்கத்தை ஆட்டிபார்க்க முடியும் என்ற துணிச்சலோடு களத்தில் குதித்தவர்கள் என்ற அடிப்படையில் எங்களுக்கிருக்கின்ற மரியாதையினை வைத்து எதிர்காலத்தில் மட்டகளப்பு, அம்பாறை, திருகோணமலை போன்ற மாவட்டங்களிலும் ஏனைய மாவட்டங்களிலும் எங்களுடைய வெற்றியை உறுதிப்படுத்தொவோம் என தெரிவித்தார்.

மேலும் சமூர்த்தி வீடமைப்பு பிரதி அமைச்சர் அமீர் அலி கடமையினை பொருபேற்றதற்குப் பிற்பாடு ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்துக்களின் காணொளியினை எமது இணைய நாளிதல் வாசகர்களுக்காக இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
[youtube https://www.youtube.com/watch?v=6wEGfcZ35MI]

Related

இலங்கை 4947814369853484353

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item