சிங்கள வாக்குகளால் மட்டும் எவரும் ஆட்சியமைக்க முடியாது – மைத்திரி

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியோ அல்லது வேறு எந்த கட்சியாகவிருந்தாலும் வெறுமனே சிங்கள பெளத்த வாக்குகளால் மட்டும் அரசாங்கமொன்றை அமைத்துவிட முடியாத...


ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியோ அல்லது வேறு எந்த கட்சியாகவிருந்தாலும் வெறுமனே சிங்கள பெளத்த வாக்குகளால் மட்டும் அரசாங்கமொன்றை அமைத்துவிட முடியாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரி வித்தார். அதற்கமைய அரசாங்கமொன்றை நிறுவ வேண்டுமாயின் சிங்கள பெளத்த, தமிழ், முஸ்லிம் ஆகிய அனைத்து இன மக்களினதும் வாக்குகள் அவசியமென்றும் அவர் கூறினார்.

நுவரெலிய மாவட்டத்தின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிரதிநிதிகளை ஜனாதிபதி நுவரெலிய புதிய நகர சபை மண்டபத்தில் நேற்று சந்தித்து உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தனியாக முன்னணி அமைப்பதற்காக அழைக்கும் கூட்டம் இலங்கைக்கு துரோகம் இழைப்பதுடன் இடது சாரிக் கொள்கைக்கும் துரோகம் இழைப்பதாக அமையும் என ஜனாதிபதி கூறினார்.

கட்சிக்குள் எவரையும் வெட்டி விடுவதற்கோ, வேறுக்கவோ வேண்டிய தேவை எனக்கு இல்லை. எனது தேவை எல்லாம் நீங்கள் அனைவரும் ஒற்றுமை யாக சகோதரத்துவத்துடன் இணைந்து செயலாற்றி அரசாங்கத்தை கட்டியெழுப்ப வேண்டுமென்பதேயாகுமென்றும் ஜனாதிபதி கூறினார்.

Related

இலங்கை 432282979747508054

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item