1931ம் ஆண்டில் இருந்து அரசியல் செய்யும் எங்களுக்கு முதல் தடவையாக சோதனை.. கண்டியில் மகிந்த.
நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் அரசியல் பழிவாங்கல்களை உடன் நிறுத்துமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கண்டி தலத...


கண்டி தலதா மாளிகைக்கு இன்று (20) விஜயம் செய்த அவர் வழிபாடுகளில் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு கோரிக்கை விடுத்தார்.
களுத்துறை, அகவலவத்தை சம்பவங்கள் மூலம் அரசியல் பழிவாங்கல் நிகழ்வுகள் வெளிகாட்டப்படுவதாகவும் 1931ம் ஆண்டில் இருந்து அரசியல் செய்யும் தங்களுக்கு முதல் தடவையாக வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாகவும் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
அப்பாவி மக்கள் இதனை எதிர்பார்த்து வாக்களிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மக்களின் தேவைக்காக தான் எப்போதும் முன்நிற்பதாக மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.
மக்கள் நம்பிக்கையுடன் வாக்களித்ததாகவும் அவர்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது கூடாது என்றும் அரசியல் ஒழுக்கம் இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.