மகிந்தவினால் முடியாத காரியத்தை முடித்த மைத்திரி!
இலங்கையில் க்லைபொசேட் என்ற களை நாசினியை இறக்குமதி செய்யவோ அல்லது விற்பனை செய்யவோ இன்று முதல் முற்றாகத் தடை விதித்துள்ளதாக ஜனாதிபதி மைத்தி...

http://kandyskynews.blogspot.com/2015/05/blog-post_56.html

இலங்கையில் க்லைபொசேட் என்ற களை நாசினியை இறக்குமதி செய்யவோ அல்லது விற்பனை செய்யவோ இன்று முதல் முற்றாகத் தடை விதித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.இலங்கையில் சிறுநீரக நோய் அதிகளவில் ஏற்படுவதற்கான காரணம் புற்கள் மற்றும் களைகளை அழிப்பதற்காக பயன்படுத்தப்படும் க்லைபொசேட் என்ற களைநாசினி என ஆய்வுகளின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை அடுத்து இத்தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் பல வருட காலமாக க்லைபொசேட் என்ற களை நாசினி பயன்பாட்டில் உள்ளதாகவும், கடந்த அரசாங்கத்தின் போது தான் அதனை சுட்டிக்காட்டியதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். எனினும் கடந்த அரசாங்கத்தின் போது குறித்த அதிகாரிகள் அந்த களைநாசினிக்கு தடை விதிக்க எவ்வித முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்டு தற்போது சந்தையில் உள்ள க்லைபொசேட் களை நாசினிகளை விற்பனை செய்ய அனுமதி வழங்குமாறு வர்த்தகர்கள் சிலர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
எனினும், நாட்டில் இனி ஒரு சிறுநீரக நோயாளியும் உருவாகுவதனை பார்க்க விரும்பாத காரணத்தினால் இன்று முதலே இதனை தடை செய்துள்ளதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.