மகிந்தவின் புதிய விதத்திலான சூழ்ச்சி
தற்போதைய அரசாங்கத்தை பிரதிநிதித்துவடுத்தும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைச்சர்கள் மேலும் சிலர் எதிர்வரும் நாட்களில் அமைச்சு பதவியில் இருந்த...

http://kandyskynews.blogspot.com/2015/05/blog-post_13.html

பகுதி பகுதியாக அரசாங்கத்தை விட்டு அமைச்சர்கள் இராஜினாமா செய்வதன் ஊடாக அரசாங்கத்தை குறித்து மக்கள் அதிருப்தி அடைய செய்வதற்கான முயற்சியே இது எனவும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அறிவுரைக்கமையவே இவ்வாறு சிலர் செயற்படுவதாகவும் அரசியல் தகவல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
அதற்கான முதற்கட்ட நடவடிக்கை நேற்று இடம்பெற்றதாகவும் இரண்டாவது நடவடிக்கையில் மேலும் ஐவர் எதிர்வரும் நாட்களில் தமது அமைச்சு பதவிகளை இராஜினாமா செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தங்கள் அமைச்சர் பதவியில் செயற்படுவதற்கு பிரதமரினால் தடை, பணம் வழங்கப்படுவதில்லை. அரசாங்க அதிகாரிகளுக்கு ஏற்படுகின்ற தடை, ஏனைய அமைச்சர்களுக்கு ஏற்படுகின்ற தடை போன்ற குற்றச்சாட்டுகளை தொடர்ந்து முன்வைத்தே இவர்கள் பதவிகளை இராஜினாமா செய்ய முயற்சித்து வருவதாக குறிப்பிடப்படுகின்றது.