பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி: இலங்கை பரிதாபம்!!
இலங்கைக்கு எதிரான 2ஆவது இருபது-20 போட்டியில் ஒரு விக்கெட்டால் வெற்றி பெற்ற பாகிஸ்தான் தொடரையும் கைப்பற்றியது. இலங்கை மற்றும் பாகிஸ்தான் ...
http://kandyskynews.blogspot.com/2015/08/blog-post_33.html
இலங்கைக்கு எதிரான 2ஆவது இருபது-20 போட்டியில் ஒரு விக்கெட்டால் வெற்றி பெற்ற பாகிஸ்தான் தொடரையும் கைப்பற்றியது.
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபது 20 போட்டி கொழும்பு ஆர். பிரேமதாஸ அரங்கில் இன்று நடைபெற்றது.
இப்போட்டியில்; நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
அந்த வகையில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக டில்சான் மற்றும் ஜனித் பெரேரா ஆகியோர் களமிறங்கினர்.
டில்சான் 10 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க ஜனித் பெரேரா 19 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இதனையடுத்து செஹான் ஜயசூரிய மற்றும் டில் சில்வா ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். அணி 61 ஓட்டங்களை பெற்றிருந்த போது டி சில்வா 14 ஓட்டங்களுடன் அப்ரிடி பந்து வீச்சில் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த திசர பெரேராவும் ஒரு ஓட்டத்துடன் ஏமாற்றமளித்தார்.
இதனையடுத்து களத்தில் இருந்த செஹான் ஜயசூரியவுடன் மிலிந்த சிறிவர்தன கைகோரத்தார். அதிரடியாக ஆடிய ஜயசூரிய 40 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
பின்னர் கப்புகெதர களம் கண்டார். இருவரும் அதிரடியாக துடுப்பெடுத்தாடினர். சுpறிவர்தன 23 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இதனையடுத்து புது முக வீரர் சானக்க களமிறங்கி 7 ஓட்டங்களை பெற்றதோடு அதிரடியாக துடுப்பெடுத்தாடிய சாமர கப்புகெதர ஆட்டமிழக்காமல் 26 பந்துகளில் 48 ஓட்டங்களை பெற்றார்.
அந்தவகையில் இலங்கை 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 172 ஓட்டங்களை பெற்றது.
பாகிஸ்தான் பந்து வீச்சில் சொயிப் மாலிக் இரு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து பதில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 19.2 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றது. ஆரம்ப முதல் விக்கெட்டுகளை பறிகொடுத்த பாகிஸ்தானுக்கு இடைநடுவில் களமிறங்கிய அப்ரிடி அதிரடியாக ஆடி வெற்றியை பாகிஸ்தான் அணி பக்கம் திருப்பினார். பின்னர் களமிறங்கிய அன்வர் அலி 46 ஓட்டங்களை பெற்று இலங்கையின் வெற்றியை பறித்தெடுத்தார்.