முஸ்லிம்கள் அனுபவித்து வந்த இருண்ட யுகம் ஐ.தே.க ஆட்சியில் இல்லாமல் போய்விடும் : ஹக்கீம்!!
ஐக்கிய தேசியக் கட்சியைத் தலைமையாகக் கொண்ட அரசாங்கம் பெரும்பான்மையோடு ஆட்சியமைக்கும் போது கடந்த 12 வருடகாலமாக முஸ்லிம் சமூகத்திற்கு இருந்...
http://kandyskynews.blogspot.com/2015/08/blog-post_62.html
ஐக்கிய தேசியக் கட்சியைத் தலைமையாகக் கொண்ட அரசாங்கம் பெரும்பான்மையோடு ஆட்சியமைக்கும் போது கடந்த 12 வருடகாலமாக முஸ்லிம் சமூகத்திற்கு இருந்து வந்த இருண்ட யுகம் இல்லாமலாகிவிடுமென்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாட்ட தலைமை வேட்பாளர் அலி ஸாஹிர் மௌலானாவை ஆதரித்து ஏறாவூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
முஸ்லிம் காங்கிரஸின் அரசியலில் புதிய யுகம் பிறந்திருக்கின்றது. எல்லாவற்றுக்கும் மேலாக சகோதர தமிழ் சமூகத்தோடு முரண்பாட்டு அரசியலைச் செய்யாமல் கைகோர்த்துக்கொண்டு தமிழ் சமூகத்தோடு இணைந்து போகின்ற எழுச்சி பெற்ற அரசியலை முஸ்லிம் காங்கிரஸ் முன்னெடுத்து வருகிறது.
அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைத்த ஜனநாயகப் பாதையை நாம் கிழக்கு மண்ணிலே முன்னுதாரணமாய் நிலை நிறுத்திக்காட்டியிருக்கின்றோம்.
ஆட்சியமைக்கவுள்ள ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இதற்கு முன்பு அரசாங்கத்தில் வகித்த பதவிகளை விட உயர்வான அந்தஸ்தோடு அதிகாரத்தோடு பத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்குக் குறையாத அணியோடு பதவியில் அமரும்.