மகிந்தவுக்கு ஆசனம் வழங்கி பாரிய வரலாற்று தவறிழைத்த மைத்திரி மீண்டும் ஒரு துரோகம் இழைக்ககூடாது:
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மீள் அரசியல் பிரவேசத்திற்கு கட்சியில் இடமளித்தன் மூலம் பாரிய வரலாற்றுத் தவறினை மீண்டுமொருமுறை மேற்கொள...


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மீள் அரசியல் பிரவேசத்திற்கு கட்சியில் இடமளித்தன் மூலம் பாரிய வரலாற்றுத் தவறினை மீண்டுமொருமுறை மேற்கொள்ளக்கூடாது என்று பிரஜைகள் அமைப்பு ஜனாதிபதி மைத்திரியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மகிந்த ராஜபக்சவின் சர்வாதிகார ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து நல்லாட்சியை ஏற்படுத்தவே மூவின மக்களும் வாக்களித்தாக அவர் சுட்டிக்காட்டினார்.
எனினும் ஜனாதிபதி மைத்திரிபாலமீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கை வீணடிக்கப்பட்டு விட்டதாக ரத்னப் பிரிய சுட்டிக்காட்டினார்.
எனவே இந்த தேர்தலில் ஒரு கட்சிக்காககவோ அல்லது ஒரு வேட்பாளருக்காகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடக்கூடாது என்று பிரஜைகள் அமைப்பு தெரிவித்தது.
அவ்வாறு செய்வதன் ஊடாக மீண்டும் ஒரு வரலாற்றுத் தவறை மைத்திரிபால சிறிசேன செய்துவிடக்கூடாது என்றார் ரத்ன பிரிய.
சர்வாதிகாரம் மற்றும் ஊழல் நடவடிக்கைகளுக்காக மகிந்த ராஜபக்சவுக்கு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.